ABP-Cvoter Exit Poll Results 2021 Live: திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பு ; வெளியானது ABP மற்றும் ‛சி வோட்டர்‛ நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
Exit Poll Results 2021 Live Abp-Cvoter Exit Poll Result 2021 Election 2021 Abp-Cvoter Exit Poll: 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இங்கே..
2016 தேர்தலோடு ஒப்பிட்டால், மண்டலவாரியாக திமுக கூட்டணி 2021-இல் அசுர வெற்றியை ருசிக்கிறது. டெல்டா மண்டலத்தில் 2016 தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை விட 17 தொகுதிகளை திமுக இந்த முறை அதிகம் பெற வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை மண்டலத்தில் 2 தொகுதிகள் அதிகம் பெறவும், கொங்கு மண்டலத்தில் 24 தொகுதிகள் அதிகம் பெறவும், வட தமிழகத்தில் 12 தொகுதிகள் அதிகம் பெறவும், தென் தமிழகத்தில் 8 தொகுதிகள் அதிகம் பெறவும், புதுச்சேரி மண்டலத்தில் 5 தொகுதிகள் அதிகம் பெறவும் வாய்ப்புள்ளது. மொத்தமாக கணக்கிட்டால் தமிழகத்தில் 2016 தேர்தலை விட இந்த தேர்தலில் திமுக 68 தொகுதிகள் அதிகம் பெற்று அமோகமாக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது.
காவிரி டெல்டா பகுதியில் திமுக 51.8 சதவிகித வாக்குகள் பெறும் என கணிக்கப்படுகிறது. இது 2016 தேர்தலில் டெல்டா மண்டலத்தில் அவர்கள் பெற்ற வாக்குச் சதவிகிதத்தை விட 12.1 சதவிகிதம் அதிகம். கருத்துக் கணிப்பின்படி ஆளும் அ.தி.மு.க. 33.1 சதவிகித வாக்குகளுடன் டெல்டா பகுதியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.https://tamil.abplive.com/elections/chola-nadu-tn-exit-poll-results-2021-abp-c-voter-exit-poll-result-exit-poll-results-chola-nadu-in-cauvery-delta-1985
சென்னை மண்டலத்தில், திமுக கடந்தமுறையுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 2 தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறை சென்னையின் வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வென்ற அதிமுக, இந்தமுறை அதில் 2 இடங்களில் பின்னடைவைச் சந்திக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
கடந்த முறை 32 இடங்களில் தென் தமிழகத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. கூட்டணி, இந்த முறை வெறும் 21 முதல் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த முறை தென் தமிழகத்தில் 26 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற தி.மு.க. இந்த முறை 33 முதல் 35 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்படுகிறது.
தென் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி, கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் தோராயமாக 10 இடங்களை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், தி.மு.க. கூட்டணி கடந்த முறையைக் காட்டிலும் கூடுதலாக 8 இடங்களில் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
2016 தேர்தலோடு ஒப்பிட்டால், மண்டலவாரியாக அதிமுக கூட்டணி 2021-இல் பலத்த தோல்வியை சந்திக்கிறது. டெல்டா மண்டலத்தில் 2016 தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை விட 15 தொகுதிகளை அதிமுக இந்த முறை இழக்கிறது. அதேபோல் சென்னை மண்டலத்தில் 2 தொகுதிகளும், கொங்கு மண்டலத்தில் 24 தொகுதிகளையும் அதிமுக இழக்கிறது. வட தமிழகத்தில் 13 தொகுதிகளையும், தென் தமிழகத்தில் 10 தொகுதிகளையும், புதுச்சேரி மண்டலத்தில் 6 தொகுதிகளையும் அதிமுக இழக்கிறது. மொத்தமாக கணக்கிட்டால் தமிழகத்தில் 2016 தேர்தலை விட இந்த தேர்தலில் அதிமுக 70 தொகுதிகளை இழக்கும் என கருத்துக்கணிப்பில் தெரியவருகிறது.https://tamil.abplive.com/elections/tn-exit-poll-results-2021-abp-c-voter-exit-poll-result-exit-poll-results-admk-2007
நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களையும், 52 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது கொங்கு மண்டலம். நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் கொங்கு பெல்ட்டில் மட்டும் 33-35 வரையிலான சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் வட தமிழக மண்டலத்தில் அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இம்முறை அதன் எண்ணிக்கையை திமுக அதிகரித்திருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக, இம்முறை 8 முதல் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுகிறது. அதே போல 25 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, 2021 தேர்தலில் 36 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது.https://tamil.abplive.com/elections/pallava-nadu-in-north-tn-exit-poll-results-2021-abp-c-voter-exit-poll-result-exit-poll-results-pallava-nadu-in-north-region-2000
இந்தியாவின் நூற்றாண்டு பாரம்பரிய செய்தி குழுமமான ABP மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. https://tamil.abplive.com/elections/exit-poll-results-2021-live-updates-tamil-nadu-puducherry-elections-exit-poll-abp-cvoter-exit-poll-results-tn-and-puducherry-leading-parties-1988
மே2ம் தேதி 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற முக்கிய தலைவர்கள் இல்லாத தேர்தல் என்பதால் வரும் தேர்தல் முடிவுகளை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த நேரத்தில் நாம் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலை ஒருமுறை திரும்பிப் பார்ப்போம். தேர்தலைச் சந்தித்த கட்சிகளின் செயல்பாடுகள் என்ன? வெற்றி பெற்ற கட்சிகள் எவையெவை? கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் என்னென்ன? பார்க்கலாம்.
வெகுஜன மக்கள் போராட்டங்கள் அரசியல் களம் அமைத்தன. ரஜினிகாந்த் (அரசியல் வருகையை அறிவித்திருந்தார்), கமல்ஹாசன், டிடிவி தினகரன், நாம் தமிழர் சீமான் போன்ற அ ரசியல் தலைவர்கள் வருகை நாடாளுமன்ற தேர்தலை மேலும் ஆழமாக்கியது
2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று என வந்து அதில் சில கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன. சில கட்சிகளின் தலைவர்களே தோல்வியை தழுவிய நிலையில் , 2016ல் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை விவரிக்கிறது ABP நாடு
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அரசு அமைய என்ன காரணம்? எது வாய்ப்பை ஏற்படுத்தியது? எது வாய்ப்பை பறித்தது? யார் பலமாக இருந்தது? யாருக்கு எது பலவீனமாக இருந்தது? போன்ற பல்வேறு தரவுகளை இன்றைய அரசியல் பார்வையோடு ஒப்பிட்டு தேர்தல் ஆய்வு கட்டுரைகளும் அடுத்தடுத்து இன்று வெளியாக உள்ளன.
தமிழ்நாட்டின் மிக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, மக்கள் நீதி மய்யம். 2018-இல் மதுரையில் அவர் கட்சியை தொடங்கியதற்கு முன்பே ட்விட்டரின் 140 கேரக்டர்களில் அடங்கிவிடாத அவரது ட்வீட்களில் அவரது தேர்தல் அரசியல் பயணம் தொடங்கியிருந்தது.
Background
இந்தியாவின் நூற்றாண்டு அனுபவம் கொண்ட ABP நிறுவனம், ‛சி வோட்டர்ஸ்’ உடன் இணைந்து தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட உள்ளது.இதில், 2021 தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -