வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலைக்கொண்டிருந்தது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை  அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதன்படி, வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று அதிகாலை முதல் கரையை கடக்கத் தொடங்கி காலை 7 மணியளவில் கரையை கடந்தது. 


காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வட கடேலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்தது.




மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால் இன்று  திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


அதேபோல, நாளையும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும் நாளை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு,  கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.


மழையின் தீவிரத்தை பொறுத்து மேலும் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: திருவாரூரில் தொடர் கனமழை - மேலும் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின


3 Farm Laws Repealed: மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது- பிரதமர் உரை


TN Rains | கரையைக் கடந்தது தாழ்வு மண்டலம்.. ஆனாலும் மழைக்கு வாய்ப்பு.. முழு விவரம்!