பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்க அமைப்புகள் ஓர் ஆண்டு காலமாக போராடி வருகிறனர். எனவே, குரு நானக் தேவ் பிறந்தநாளில் பிரதமர் மோடி உரையாற்றுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.     


பிரதமர் தனது உரையில், "ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தில் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியதாக மனநிறைவு அளிப்பதாக  பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்தார். ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தின் வழியாக யாத்திரை செல்வதற்கு, தற்போதுள்ள நடைமுறைகள் மற்றும் கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றப்படும்" என்றார். 


 விவாசாயப் பெருங்குடி மக்களின் நலன்களையும்  பாதுகாப்பையும் உறுதி செய்ய எனது தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்த பிரதமர், " கடந்தாண்டு இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்படும் " என்று அறிவித்தார்.     


PM Modi address the nation  today at 9 AM  Sri Guru Nanak Dev Ji PM Modi  


 



 


 


முன்னதாக, இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் குறிப்பில்,  சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குரு நானக் தேவ், பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் மகோபா மற்றும் ஜான்சி மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். அதனையடுத்து, பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்" என்று பதிவிட்டது.