கடற்படையில் அசிஸ்டன்ட் கமாண்டட் பதவிக்கான ஆள் சேர்க்க அறிவிப்பை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், ஜெனெரல் சர்விஸ் பிரிவில் 40 பணியிடங்களும்,டெக்னிக்கல் பிரிவில் 1௦ பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
1 ஜூலை 1997 முதல் 30 ஜூன் 2001 வரை (இரு தேதிகளும் உட்பட) பிறந்து 2௦- 24 வயதுகுட்பட்ட தனிநபர்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இடஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள், பொறியியல் படிப்புகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
www.joinindiannavy.gov.in. என்ற இணையதளம் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த இணையதளம் தவிர விண்ணப்பப் பதிவுக்கு வேறு எந்த இணையதளமோ அல்லது செயலியோ கிடையாது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து வைத்த விண்ணப்பதாரர்கள், இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும்போது ஏற்படும் நெரிசலில் சிக்காமல் விரைவாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
தேர்வு முறை:
முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இருகட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்டமாக உடல்தகுதி மற்றும் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதன்பின், பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் அறிவிக்கப்படும். உடல் தகுதி மற்றும் மருத்துவ தகுதி உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள www.joinindiannavy.gov.in. என்ற இணையதளத்தைக் காணவும்.
நவம்பர் 14 -ஆம் தேதியன்று நடக்கவுள்ளது இராணுவ, கடற்படை அகாடமி தேர்வுகள்..!
தேதி: இப்பணிக்கு ஜூலை 4 முதல் ஜூலை 14ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் பொது சேவை மையங்களையும் அணுகி, விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். விண்ணப்பங்கள் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்படும்போது, ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
UPSC தேர்வில் வெல்வது எப்படி? - டிப்ஸ் சொல்கிறார் சிருஷ்டி ஜெயந்த் தேஷ்முக்..!