தமிழ்நாட்டின் நீதித்துறை மாவட்டங்களில்  அலுவலகம் சார்ந்த மற்றும் சாராத 3557 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அடுத்தமாதம் 9ம் தேதி வரை தேர்வர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.       


பணியிடங்கள்:   


தமிழ்நாட்டின் நீதித்துறை மாவட்டங்களில், அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர், தோட்டக்காரர், காவலர், இரவுக் காவலர் மற்றும் மசால்ஜி, துப்புரவு பணியாளர், துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை படுத்துபவர், மசால்ஜி போன்ற பிரிவுகளில் நேரடி தேர்வின் மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.  


https://www.mhc.tn.gov.in என்ற  இணையதளம் வாயிலாக மட்டும்,  தகுதி வாய்ந்த  விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அலுவலக உத்ளியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.   


தேர்வு இல்லை, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : தென்னக ரயில்வே பயிற்சி வேலையில் விண்ணப்பிப்பது எப்படி?


கவனத்தில் கொள்ள வேண்டியவை :


ஒவ்வொரு நீதித்துறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அவர்கள் விருப்பப்படி ஏதாவது ஒரு நீதித்துறை மாவட்டத்தில் தங்களுக்கு ஏற்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏனெனில் அனைத்து  நீதித்துறை மாவட்டங்களில் உள்ள ஒரே விதமான பதவிக்கான (உதாரணமாக அலுவலக உதவியாளர் பணி) தேர்வுகள்/நேர்முக தேர்வுகள் ஆகியவை  அந்தந்த மாவட்டங்களிலோ அல்லது மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆட்சேர்ப்பு பிரிவு, நிர்ணயிக்கும் வேறு இடங்களிலோ ஒரே நாளில் நடைபெறலாம்.


விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட நீதித்துறை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பின்பு, மற்றொரு நீதித்துறை மாவட்டத்திற்கு மாற்றம் செய்ய எழுப்பப்படும் எந்த ஒரு கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.    


Madras High Court Recruitment 2021 Last Date Extended for 3557 Posts Apply Online at mhc.tn.gov.in


தேர்வுக் கட்டணம்: 


6. தேர்வு கட்டணம்:  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இசுலாமியர்)/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர்/மற்றவர்கள் - ஒவ்வொரு பதவிக்கும் ரூ.500/ கட்டணம் செலுத்த வேண்டும் 


ஆதிதிராவிட வகுப்பினர், ஆதிதிராவிட வகுப்பினர் (அருந்ததியர்), பழங்குடியினர் (தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கட்டண விலக்கு பொருந்தும்) - முழு விலக்கு அளிக்கப்படுகிறது.   


மாற்றுத் திறனாளிகள் மற்றும் அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு அளிக்கப்படுகிறது. 


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு ஆணையிட வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை


காலிப் பணியிடங்கள் விவரம் : 


அலுவலக உதவியாளர் – 1911 மற்றும் சுகாதார பணியாளர், தோட்டக்காரர், காவலர், இரவுக் காவலர் போன்ற பிரிவுகளில் 1566 காலிப்பணியிடங்கள் உள்ளன 


https://www.mhc.tn.gov.in என்ற முகவரியில் சமர்பிக்கப்படும் இணையவழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். வேறெந்த முறையிலாவது, அதாவது தபால், கூரியர், பதிவுத் தபால், மின்னஞ்சல் போன்றவை மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ள படமாட்டாது. இது, சம்மந்தமாக விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் எந்த ஒரு கடிதப் போக்குவரத்தும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.