Morning Wrap: காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், ப்ளஸ் 2 செய்முறை மற்றும் அகமதிப்பீட்டு தேர்வில் பெற்ற 30 சதவீத மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்பட உள்ளது.

Continues below advertisement

அயோத்தியாவின் வளர்ச்சித் திட்டம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது அயோத்தியாவை நேரில் காண இளம் தலைமுறையினர் விரும்ப வேண்டும் என்றும் கூறினார்.

மின்சார வாரியம் என்பது சேவைத்துறை. அது வருமானம் ஈட்டித்தரும் துறை கிடையாது.  மக்களுக்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசின் நிதி உதவி பெற்று மின் கட்டணத்தை உயர்த்தாமல் தடையில்லாத மின்சாரத்தை வழங்கினோம் என முன்னாள் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 

''இழப்பு இல்லாமல் மின்சாரத்துறையை நடத்த முடியாது'' - சிஏஜி அறிக்கை குறித்து தங்கமணி 

தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்கள் நம்பிக்கைக்காக மகப்பேற்றினை மாற்றியமைக்க முயற்சிப்பது தவறானது. அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நாடுகள் மற்றும் வளர்ச்சி அடைந்த நாடுகள், ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்க முன்வர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்தியாவின் கொரோனா மூன்றாவது அலை உருவாகுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அதன்  தாக்கம் முந்தைய இரண்டு அலைகளை விட குறைவானதாக இருக்கும் என ஐசிஎம்ஆர் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

Covid-19 Third Wave in India: மூன்றாவது அலையின் பாதிப்பு தீவிரமாக இருக்காது - ஐசிஎம்ஆர் ஆய்வு கூறுவது என்ன?

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்தது. 


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது சேவைக் கட்டண விதிகளை திருத்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல், அடிப்படை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் மாதம் 4 முறைக்கு மேலாக எஸ்பிஐ வங்கிக் கிளையில் (அ) ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தால் ஒரு பரிவர்த்தனைக்கு 15 ரூபாயும்,ஜிஎஸ்டி சேவை வரியும் வசூலிக்கப்படும். மேலும், ஒரு வாடிக்கையாளர் வேறொரு வங்கியின் ஏடிஎம்(ATM)ஐ பயன்படுத்தினால் அந்த ஒரு பரிவர்த்தனைக்கும் இதே கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

2ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் அட்டவணை அறிவிப்பு !

2ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,   3 உள்நாடு டெஸ்ட் தொடர்  மற்றும் 3 வெளிநாட்டு டெஸ்ட் தொடர் என 6 டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.  

Continues below advertisement