கடந்த 2018-ஆம் ஆண்டில் வெளியான யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய வரிசையில் ஐந்தாம் இடம் பெற்ற சிருஷ்டி ஜெயந்த் தேஷ்முக். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பட்டம் பெற்றவர். லட்சுமி நாராயணன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேதியியல் பட்டம் பெற்ற தேஷ்முக் முதல்நிலை தேர்வில் சாதிப்பதற்கான டிப்ஸ்களை சொல்கிறார்.


ஒவ்வொரு நாளும் உங்கள் செயல்பாடுகளுக்கு எவ்வுளவு நேரம் கொடுக்கிறீர்கள் என்பதை பாருங்கள். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உங்களை சோர்வடைய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம், அவ்வாறு செய்வது நீங்கள் படிக்க ஒதுக்கும் நேரத்தி குறைக்கும். NCERT- பாடப்புத்தகங்கள் உடன் படிக்க தொடங்குங்கள். NCERT பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் தொடர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வுகளில் இடம்பெறும், மேலும் மற்ற புத்தகங்களில் உள்ள தலைப்புகளை நீங்கள் தேர்வு செய்யவும் NCERT பாட புத்தகத்தில் உள்ள பாடங்களை உள்வாங்கி இருக்க வேண்டும். 



எப்படித் தயாராக வேண்டும்?


தேர்வர்கள் தயாராகும் போது முதலிலேயே முதன்மை தேர்வுக்கான தயாரிப்புகளில்தான் ஈடுபட வேண்டும். தொடக்கத்தில் தங்களின் முழு நேரத்தையும் ஆற்றலையும் செயலையும் முதன்மை தேர்வுக்கு மட்டுமே பயன்படுத்தி தயாராக வேண்டும். முதன்மை தேர்விற்கு தயாராகும்போதே மெயின் தேர்விலும் கவனம் செலுத்துவதை தவிருங்கள். மாதிரி நேர்காணல்களுக்கான தயாரிப்புகளை மேற்கொள்ளும்போது வாசிப்பை அதிகப்படுத்தி அதற்கான தயாரிப்புகளை நினைவில் நிறுத்துங்கள். தினசரி நாட்டு நடப்புகளை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். பி.ஐ.பி, ராஜ்யசபா தொலைக்காட்சி மற்றும் விஷன் ஐ.ஏ.எஸ் நாளிதழ் உள்ளிட்ட நாளிதழ்களை தவறாமல் படித்து அதில் இருந்து குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். மாதிரி நேர்காணல்களை மேற்கொண்ட பிறகு பதில்களை பகுப்பாய்வு செய்ய வேண்டும். தேர்வில் 110 மற்றும் அதற்கு அதிகமான மதிப்பெண்களை பெறும் அடிப்படையில் நமது தயாரிப்புகள் அமைய வேண்டும். தவறுகளை வகைப்படுத்த தொடங்கினால் மதிப்பெண்களை தவிர விடுவதை வழிவகை செய்யலாம். இந்த நடவடிக்கை கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதை வழிவகை செய்யும். 


தயாரிப்புக்கு உதவும் NCRT புத்தகங்கள்


புத்தகங்களை பொறுத்தவரை NCRT வெளியிட்டுள்ள 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையுள்ள எல்லா புத்தகங்களையும் படிக்க வேண்டும். வரலாறு தொடர்பான படிப்புகளுக்கு தமிழ்நாடு பாடல்நூல் கழகத்தின் பதினோன்றாம் வகுப்பு பாடமான பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா குறித்த புத்தகமும் ராஜீவ் அஹிரின் நவீன இந்தியா புத்தகமும், நார்மன் லேவ்வின் உலக வரலாறு குறித்த புத்தகத்தையும் வாசிப்பது அவசியம்.


கலாச்சாரம் குறித்த தயாரிப்புகளுக்கு நிதின்  சிங்கானியாவின் புத்தகங்களும், புவியியல் குறித்த தயாரிப்புகளுக்கு ஜி.சி.லியோங்கின் புத்தகங்களும், அரசியல் குறித்த புத்தகங்களுக்கு லட்சுமிநாத் மற்றும் டி.டி.பாசுவின் புத்தகங்களும், பொருளாதாரம் குறித்த தயாரிப்புகளுக்கு ரமேஷ் சிங்கின் புத்தகங்களும், வழக்குகள் தொடர்பான தயாரிப்புகளுக்கு ஆர்.ராஜகோபாலன் புத்தகங்களும் படித்திருப்பது அவசியம் என கூறுகிறார் சிருஸ்டி ஜெயந்த் தேஷ்முக்.