மேலும் அறிய

IIT Madras: ஐஐடி சென்னையில் டேட்டா சைன்ஸ் படிப்பு அறிமுகம்; வேலைவாய்ப்பு பிரகாசம்- விண்ணப்பிப்பது எப்படி?

ஐஐடி சென்னையில் தரவு அறிவியல் & மேலாண்மை இளங்கலை! வேலைவாய்ப்பு, எதிர்காலம் பிரகாசம்! விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 31, 2026

ஐஐடி சென்னை, மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் படிப்பில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை (B.S. Data Science) அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) மேலாண்மைக் கல்வித் துறை (Department of Management Studies – DoMS) மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் எனும் பல்துறை இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்படிப்பில் சேருவோரை வணிகரீதியாக முடிவெடுத்தல், சிந்தித்து திட்டமிடல், தரவு சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறச் செய்யும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறுவோருக்கு ஐஐடி சென்னையின் இளங்கலை அறிவியல் பட்டம் வழங்கப்படும். இக்கல்வி நிறுவனம் வழங்கும் இதர இளங்கலைப் பட்டங்களுக்கு நிகரான அங்கீகாரத்தைக் கொண்டிருக்கும்.

மாணவர் சேர்க்கை, கற்றல் தளம், வேலைவாய்ப்பு, தொழில் வழிகாட்டல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை ஐஐடி சென்னையின் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (Centre for Outreach and Digital Education - CODE) செய்துகொடுக்கும்.

பட்டதாரிகளை தொழில்ரீதியாகத் தயார்படுத்தும் வகையில் உள்ளகப் பயிற்சி மற்றும் ப்ராஜக்ட் அடிப்படையிலான கற்றல் வாய்ப்புகளை வழங்குவதற்காக தொழில்துறையினருடன் இக்கல்வி நிறுவனம் இணைந்து செயல்படுகிறது.

முக்கிய தேதிகள்

இப்படிப்பின் முதல் பேட்ச் ஜூன் 2026-ல் தொடங்கும். இதற்கு விண்ணப்பிக்க மே 31, 2026 கடைசி நாளாகும். இதற்கான தகுதித் தேர்வு ஜூலை 19ஆம் தேதி நடைபெறும். 12ஆம் வகுப்பை முடித்தவர்கள், இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். 

பாடத்திட்டம் மற்றும் மாணவர் சேர்க்கை விவரங்களை https://study.iitm.ac.in/mg என்ற இணையதளத்தில் காணலாம்.

இந்த பாடத்திட்டத்தை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, இன்று (பிப்ரவரி 21, 2026) ஐஐடி சென்னை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு எப்படி?

உற்பத்தி- கட்டுமானம், வங்கி- நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம்- தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின்வணிகம், ஆலோசனை, சுகாதாரம், கொள்கை வகுப்பு அமைப்புகள் போன்ற துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. உயர்படிப்புகள்,ஆராய்ச்சி, தொழில்முனைவு முயற்சிகளுக்கு வலுவான அடித்தளத்தை இப்பாடத்திட்டம் வழங்குகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
TNPSC தேர்வர்கள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்தாச்சு.! தேதி அறிவித்த சென்னை மாவட்ட ஆட்சியர்
TNPSC தேர்வர்கள் எதிர்பார்த்த குட் நியூஸ் வந்தாச்சு.! தேதி அறிவித்த சென்னை மாவட்ட ஆட்சியர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Toyota Urban Cruiser Ebella: எபெல்லா வந்தாச்சு..! இ-விட்டாரா தாங்குமா? டொயோட்டா EV-யின் விலை, அம்சங்கள், வசதிகள்
எபெல்லா வந்தாச்சு..! இ-விட்டாரா தாங்குமா? டொயோட்டா EV-யின் விலை, அம்சங்கள், வசதிகள்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Normal vs Power Petrol: நார்மல் பெட்ரோலா.? பவர் பெட்ரோலா.? உங்கள் கார், பைக்கிற்கு சிறந்தது எது.? தெரிஞ்சுக்கோங்க
நார்மல் பெட்ரோலா.? பவர் பெட்ரோலா.? உங்கள் கார், பைக்கிற்கு சிறந்தது எது.? தெரிஞ்சுக்கோங்க
Embed widget