மேலும் அறிய

26 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆவண எழுத்தர் உரிமத் தேர்வு; உடனே நடத்தக் கோரிக்கை!

ஆவண எழுத்தர் உரிமம் பெறுவதற்கான தகுதியும், அனுபவமும் பெற்ற 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வுக்காக காத்திருக்கும் நிலையில், அதை நடத்த தமிழக அரசின் சார்பில்  எந்த நடவடிக்கையும் இல்லை.

தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆவண எழுத்தர் உரிமத் தேர்வை வயது வரம்பு இல்லாமல் உடனடியாக அரசு நடத்த வேண்டும் என்று பா.ம.க.  நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

’’தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களை தயாரித்து வழங்குவதற்கான ஆவண எழுத்தர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுகள் 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 26 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. ஆவண எழுத்தர் உரிமம் பெறுவதற்கான தகுதியும், அனுபவமும் பெற்ற 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வுக்காக காத்திருக்கும் நிலையில், அதை நடத்த தமிழக அரசின் சார்பில்  எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் கடைசியாக 1998ஆம் ஆண்டில் ஆவண எழுத்தர் உரிமத் தேர்வு நடத்தப்பட்ட பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன் பயனாக சார்பதிவாளர் அலுவலகங்களின் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களில் எண்ணிக்கை 5141 ஆகவே உள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேறு பணி, வயது முதிர்வு, உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போது பணி செய்யவில்லை. அதனால் ஒரு பதிவாளர் அலுவலக எல்லையில் சராசரியாக ஐந்துக்கும் குறைவாக ஆவண எழுத்தர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

குறிப்பிட்ட இடைவெளியில் தேர்வுகள்

தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் பதிவு செய்யப்படும் சொத்து மற்றும் பிற ஆவணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால், அவற்றை எழுதித் தரும் அளவுக்கு ஆவண எழுத்தர்களின் எண்ணிக்கை உயரவில்லை. அதற்கு காரணம் குறிப்பிட்ட இடைவெளியில் ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகள் நடத்தப்படாததுதான்.

போதிய எண்ணிக்கையில் ஆவண எழுத்தர்கள் இல்லாததால் பத்திரப் பதிவு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குறைகிறது.  ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகளை நடத்தி உரிமம் வழங்குவதால் அரசுக்கு எந்த செலவும் ஏற்படாது. ஆனாலும், ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு தயங்குவதற்கான காரணம் தெரியவில்லை.

நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு

ஆவண எழுத்தர்களின் பற்றாக்குறையை உணர்ந்து கொண்ட தமிழக அரசு, அதற்கான தேர்வு விரைவில் நடத்தப்படும்; பத்திரப் பதிவுத்துறை தலைவர் அலுவலகம் மூலம் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டில் அறிவித்தது. ஆனால், அதன்பின் இரு ஆண்டுகள் ஆகியும் அந்தத் தேர்வு நடத்தப்படவில்லை. அதை விட தமிழக அரசு செய்துள்ள இன்னொரு பெரிய அநீதி ஆவண எழுத்தர் தேர்வில் பங்கேற்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்புதான்.

26 ஆண்டுகளாக ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான அதிகபட்ச வயது 35 ஆகவும், பிற வகுப்பினருக்கான வயது வரம்பு 33 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆவண எழுத்தர் உரிமத்திற்காக காத்திருப்பவர்களின் குறைந்தபட்ச வயதே 40 ஆகும். அவர்களில் பலர் 55 வயதைக் கடந்து விட்டனர். இத்தகைய சூழலில் அதிகபட்சம் வயது 33 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதன் மூலம், ஆவண எழுத்தர் உரிமத்திற்காக காத்திருக்கும் எவருக்கும் பயன் கிடைக்காது. எனவே, அனைத்துத் தரப்பினரின் நன்மை கருதி தமிழ்நாட்டில் ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தேர்வை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்; அதுமட்டுமின்றி, ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுக்கான வயது வரம்பை நீக்க வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Maruti Victoris Discount: லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
Embed widget