மேலும் அறிய

West Bengal News : மேற்கு வங்காளத்தில் தீ வைக்கப்பட்ட வீடுகள்..! கருகிய நிலையில் 7 உடல்கள் கண்டெடுப்பு..! திரிணாமுல் கட்சிக்கு தொடர்பா?

மேற்கு வங்காளத்தில் ராம்புர்கத் கிராமத்தில் தீ வைக்கப்பட்ட வீட்டில் இருந்து 7 உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பீர்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ளது ராமபுர்கத் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் ஒரே வீட்டில் 7 நபர்களின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டின் மீது வீசப்பட்ட குண்டுவீச்சு காரணமாகவே அந்த வீடு தீப்பற்றி எரிந்து வீட்டில் இருந்தவர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்ததாக அந்த கிராமத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அந்த மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாரிஷல் கிராம பஞ்சாயத்தின் துணைத்தலைவராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாதுஷேக்( வயது 38) என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் போக்டூய் பகுதியில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவர் மீது வெடிகுண்டுகளை வீசினர். படுகாயங்களுடன் ராம்புர்கத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதுஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

West Bengal News : மேற்கு வங்காளத்தில் தீ வைக்கப்பட்ட வீடுகள்..! கருகிய நிலையில் 7 உடல்கள் கண்டெடுப்பு..! திரிணாமுல் கட்சிக்கு தொடர்பா?

இந்த சம்பவத்திற்கு பல இடங்களில் குண்டுகள் வீசப்பட்டதுடன் அந்த பகுதியில் ஐந்து வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு எரிக்கப்பட்ட ஒரு வீட்டில் இருந்துதான் 7 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் கொலைக்கு பழிவாங்கும் நோக்கத்திற்காகவே இந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அந்த மாவட்ட தலைவர் மோண்டோல் கூறும்போது, மின்கசிவின் போது ஏற்பட்ட விபத்து காரணமாகவே தீப்பற்றி எரிந்து இந்த வீடுகள் எரிந்ததாகவும், அந்த கிராமத்தில் நேற்று இரவு எந்த வன்முறையும் நடக்கவில்லை என்றும், அந்த பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் அதுபோன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

West Bengal News : மேற்கு வங்காளத்தில் தீ வைக்கப்பட்ட வீடுகள்..! கருகிய நிலையில் 7 உடல்கள் கண்டெடுப்பு..! திரிணாமுல் கட்சிக்கு தொடர்பா?

இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாவட்ட எஸ்.பி.நாகேந்திரநாத் திரிபாதி கூறும்போது, ஒரே வீட்டில் இருந்து 7 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர்களது  உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று மட்டும் கூறினார். மாநில அமைச்சர் பிர்காத் ஹக்கீம், ஆசிஸ் பானர்ஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ராம்புர்கத் கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - அதிகாரிகளின் விளக்கம் என்ன?
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - விளக்கம் என்ன?
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
சினிமாவை மிஞ்சிய சம்பவம்.. பாம் சரவணனை தட்டி தூக்கிய சென்னை கிரைம் போலீஸ்.. திருவள்ளூரில் பரபரப்பு
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
பெற்றோர்களே உஷார்! வீட்டின் முன்னே விளையாடிய குழந்தைகளுக்கு 'பேட் டச்'... முதியவரை தூக்கிய போலீஸ்!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!
விழுப்புரத்தில் கொடூரம்! 3 குழந்தைகளின் தாய் மீது நடுரோட்டில் ஆசிட் வீசிய கணவர் அதிரடி கைது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Embed widget