மேலும் அறிய
Advertisement
சென்னையில் திடீரென மாயமான இளைஞர்.. பாலியல் தொழிலாளி காரணமா? கொலையா?
ஜெயந்தன் காணாமல் போனதற்கும், அந்த பெண்ணிற்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் பழவந்தாங்கல் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திடீர் மாயம்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தன் (29). இவர் சென்னை நங்கநல்லூரில் தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். அதோடு இவர் கடந்த 5 ஆண்டுகளாக, சென்னை விமான நிலையத்தில், வெளிநாட்டு விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் ஜெயந்தன் கடந்த மார்ச் 18 ஆம் தேதி மதியம், சகோதரி வீட்டிலிருந்து, சென்னை விமான நிலையத்திற்கு வேலைக்குப் புறப்பட்டு சென்றார். அப்போது பணி முடிந்ததும், அங்கிருந்து சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் போய்விட்டு தான் வருவேன் என்று சகோதரியிடம் கூறிவிட்டு சென்றார்.
காணவில்லை என புகார்
ஜெயந்தன் அவ்வாறு கூறிவிட்டு சென்று சில நாட்கள் ஆகியும், அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. அதோடு அவருடைய சகோதரி, ஜெயந்தனுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக வந்து கொண்டிருந்தது. இதை அடுத்து ஜெயந்தன் சகோதரி, பழவந்தாங்கல் போலீசில், தனது தம்பி ஜெயந்தனை காணவில்லை என்று புகார் செய்தார். இதனையடுத்து இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
புதுக்கோட்டை சென்ற போலீஸ்
இந்நிலையில் ஜெயந்தன் செல்போன் சிக்னலை வைத்து சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட பொழுது , புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியது. இதனை அடுத்து கடந்த ஒன்றாம் தேதி புதுக்கோட்டை பகுதிக்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். பாக்கியலட்சுமி, பாலியல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை
அவரை விசாரித்தபொழுது முன்னுக்குப்பின் புறம்பான தகவல்களை தெரிவித்தால் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்தார். ஜெயந்தனை கொலை செய்து விட்டதாகவும், உடலை துண்டு துண்டாக கூறு போட்டு, சென்னை அடுத்துள்ள கோவளம் கடற்கரை அருகே குழிதோண்டி புதைத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை வட்டாரங்கள் கூறுவதென்ன?
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த பொழுது அந்தப் பெண்ணிற்கும் கொலை செய்யப்பட்ட ஊழியருக்கும் என்ன மாதிரியான சம்பந்தம் இருக்கிறது என்று கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். சம்பந்தப்பட்ட பெண் மற்றும் கொலையான இளைஞர் இருவரும் முதல் முறை தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்துள்ளனர் அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது இது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். முழு விசாரணை முடிந்த பின் கொலை நடைபெற்றதா? எதற்காக இந்த கொலை நடைபெற்றது என்பது குறித்து தெரியவரும் என தெரிவித்தனர்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion