Villupuram Student Death: தொடரும் பள்ளி மாணவிகளின் தற்கொலை....விழுப்புரத்தில் விஷம் குடித்த 12ஆம் வகுப்பு மாணவி..!
காலையில் பள்ளிக்கு வந்த மாணவி வீட்டில் இருந்து வரும் பொழுதே மயக்க மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.
![Villupuram Student Death: தொடரும் பள்ளி மாணவிகளின் தற்கொலை....விழுப்புரத்தில் விஷம் குடித்த 12ஆம் வகுப்பு மாணவி..! Villupuram 12th Student Commits Suicide by Consuming Poison in Classroom Govt School Villupuram Student Death: தொடரும் பள்ளி மாணவிகளின் தற்கொலை....விழுப்புரத்தில் விஷம் குடித்த 12ஆம் வகுப்பு மாணவி..!](https://static.abplive.com/wp-content/uploads/sites/7/2018/12/17100355/1-Man-gives-poison-to-his-two-children-attempts-suicide.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையில், மாணவிக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர், இதற்கு விருப்பம் இல்லாததால், காலையில் பள்ளிக்கு வந்த மாணவி வீட்டில் இருந்து வரும் பொழுதே மயக்க மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.
அவர் பள்ளி வளாகத்தில் வாந்தி எடுக்கும் பொழுது சக நண்பர்கள் சென்று அவரிடம் கேட்டபோது, அந்த மாணவி தான் மயக்க மருந்து சாப்பிட்டு விட்டேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக தலைமை ஆசிரியர் மாணவியை அருகில் உள்ள கானை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மேலும் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவ இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)