விக்னேஷ் மரணம்: 10 மணிநேர விசாரணைக்குப் பிறகு 2 காவலர்கள் கைது..
சிறையில் இருந்த விக்னேஷ் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மரணம் அடைந்தார். விக்னேஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
சென்னையில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் ஆகிய இருவரும் வந்த ஆட்டோவை கெல்லீஸ் அருகே, காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் வந்த இருவரிடமும், காவல்துறையினர் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால், போலீஸார் அவர்களை சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின்போது அவர்களிடம் கஞ்சா, மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்த விக்னேஷ் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மரணம் அடைந்தார். விக்னேஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் விக்னேஷ் மரணம் தொடர்பாக வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில், விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருப்பதாக தகவல் வெளியானது. அதனை அடுத்து விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கில், 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 மணி நேரம் தொடர்ந்த விசாரணைக்கு பிறகு, 2 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்