Crime: உத்தர பிரதேசத்தில் ரயில்வே பெண் போலீசாரை தாக்கிய நபர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெண் போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்:


நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கு வருகிறது. தற்போது உத்தர பிரதேசத்தில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு தரும் போலீசாருக்கே இந்த நிலையா? என்ற பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது, உத்தர பிரதேச மாநிலத்தில் ரயில்வே பெண் போலீசாரை ஒருவர் கொடூரமாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 


உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜ்சங்கம் வரை சராயு விரைவு ரயில் இயங்கி வருகிறது. கடந்த மாதம் 30ஆம் தேதி பெண் போலீஸ் ஒருவர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது, அங்கு இருந்த மர்ம நபர்கள் சிலர் பெண் போலீசாரை தொந்தரவு செய்தனர். பின்னர், அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்து பெண்ணை அருகில் இருந்த பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிசிக்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.


என்கவுண்ட்டர்:


இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்ததோடு, மாநில அரசை கடுமையாக சாடியது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் போலீஸின் சகோதரர் அயோத்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்தியவர்கள் தேடி வந்தனர்.


அப்போது, பெண் போலீஸை தாக்குதல் நடத்தியது அனீஷ் கான் என்றது  தெரியவந்தது. பின்னர்,  அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்து சென்றனர். அங்கு அனிஷ் கான் உட்பட 3 பேர் இருந்தனர். அங்கு இருந்தவர்கள் போலீசாரை பார்த்தவுடன் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தற்காப்புக்காக போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர். 


இதனால் இருதரப்பிற்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் அனிஷ் கான், ஆசாத், விசாம்பர் தயால் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அனிஷ் கான் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  ரயிலில் பெண் போலீஸை கொடூரமாக தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் போலீஸ் என்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் படிக்க 


Crime: உறவினர்கள் கண்முன்னே.. 3 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டூழியம்!


ராணுவ வீரர்களிடம் பண மோசடி; மதுரை மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் புகார் மனு