மேலும் அறிய

மயிலாடுதுறையில் பயனளிக்காத கஞ்சா 2.0: பள்ளி மாணவர்கள் இடையே அதிகரிக்கும் கஞ்சா பழக்கம்!

குத்தாலத்தில் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே கஞ்சா புழக்கம் மூன்று ஆண்டுகளாக இருப்பதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசிய அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கஞ்சா அடித்து விட்டு சகமாணவனை தாக்கிய மாணவர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் பலன் இல்லை என்று பள்ளி தலைமை ஆசிரியர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் விற்பவர்கள் மீதான கடும் நடவடிக்கையை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. 'கஞ்சா ஆபரேசன் 2.O' என்ற பெயரில் அதிரடி வேட்டையை நடத்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.


மயிலாடுதுறையில் பயனளிக்காத கஞ்சா 2.0: பள்ளி மாணவர்கள் இடையே அதிகரிக்கும் கஞ்சா பழக்கம்!

அதனை தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் கஞ்சா ஆபரேசன் 2.O வை தீவிரப்படுத்தி சோதனையையும், கண்காணிப்பையும் காவல்துறையினர் நடத்தி வருவதோடு, நூற்றுக்காணக்கானோரை கைது  செய்தும் அவர்கள் வங்கிகணக்குகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறி வருகின்றனர்.


மயிலாடுதுறையில் பயனளிக்காத கஞ்சா 2.0: பள்ளி மாணவர்கள் இடையே அதிகரிக்கும் கஞ்சா பழக்கம்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கஞ்சா அடித்து விட்டு சகமாணவனை தாக்கிய மாணவர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் பலன் இல்லை என்று பள்ளி தலைமை ஆசிரியர் பேசும் வாட்ஸ் அப் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை கஞ்சா அடித்த சில மாணவர்கள் தாக்கியுள்ளனர். அதனால் அந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமல் தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனை ஆசிரியர்களிடம் சொல்ல வேண்டிய தானே என்று மாணவனின் தந்தை கேட்டதற்கு அதை சொன்னாலும் வெளியே வந்த பிறகு மீண்டும் அந்த மாணவர்கள் தன்னை அடிப்பார்கள் என்று தாக்கப்பட்ட பையன் தெரிவித்துள்ளான். 

குத்தாலம் பள்ளியில் கஞ்சா! ஆசிரியர்கள் ஒப்புதல் வாக்கு மூலம்!! pic.twitter.com/0RGXBn0RoJ

— JAGANNATHAN (@Jaganathan_JPM) September 19, 2022

">

இது சம்பந்தமாக மாணவனின் தந்தை நேரடியாக பள்ளிக்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து கேட்கையில், பள்ளியில் 1500 மாணவர்கள் படித்து வருவதாகவும், 1500 பேரும் 1500 தவறுகள் செய்வார்கள் என்றும் அதனை எல்லாம் தங்களால் கண்காணிக்க முடியாது, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நாங்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம் கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிப்பதில்லை. இது மூன்று ஆண்டுகளாக நடைபெறும் நிகழ்வு எனவும், ஒரு மாணவனை அவரது பெற்றோரால் கண்காணிப்பது சிரமமாக உள்ள நிலையில், 1500 மாணவர்களை கண்காணிப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது. பள்ளிக்கு வெளியே கஞ்சா விற்பதை நாங்கள் எப்படி தடுக்க முடியும்? என தலைமை ஆசிரியர் கூறுகிறார்.


மயிலாடுதுறையில் பயனளிக்காத கஞ்சா 2.0: பள்ளி மாணவர்கள் இடையே அதிகரிக்கும் கஞ்சா பழக்கம்!

கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் கொடுங்கள் என்று மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டி உள்ளார். செய்தியாளர்களிடமும் தனிப்பட்ட முறையில் கஞ்சா விற்கும் நபர்கள் குறித்து தகவல் இருந்தால் கொடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் கீழ் மட்டத்தில் உள்ள காவல்துறையினர் இந்த கஞ்சா விற்பனையை கண்டு கொள்ளாமல், தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளது சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"என் உயிருக்கு ஆபத்து... காப்பாற்றுங்கள்"– எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத மனைவி! பரபரப்பு பின்னணி!
" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?
Embed widget