Crime: ராங் காலில் மலர்ந்த காதல் - காதலனுக்காக கணவனுக்கு டாடா சொன்ன மனைவி, எலும்புகள் மட்டுமே மிச்சம்
Marriage Dispute: ராங் காலில் தொடங்கிய திருமணத்தை மீறிய காதல், கொலையில் முடிந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

Marriage Dispute: கணவனை விட்டு தன்னுடன் ஓடிவந்த பெண்ணை காதலன் கொலை செய்த சம்பவம், இரண்டு வருடங்களுக்குப் பிறகு அம்பலமாகியுள்ளது.
கொலையில் முடிந்த ராங் கால் காதல்:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ அருகே ராங் கால் மூலம் ஏற்பட்ட அறிமுகம், நாளடைவில் திருமணத்தை மீறிய தகாத உறவாக உருவெடுத்துள்ளது. காதலனுக்காக கணவனையே விட்டுச் சென்ற 30 வது பெண், 2 வருடங்களுக்குப் பிறகு வெறும் எலும்புக்கூடாக மீடகப்பட்டுள்ளார்.இந்த ஒட்டுமொத்த சம்பவமும் ஹர்தோய் பகுதியில் இரண்டு பேரை கைது செய்த பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருமணத்தை மீறிய காதல்:
கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சோனம் எனும் பெண், எதிர்பாராத விதமாக தொலைபேசியில் தவறான எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். அந்த அழைப்பை ஏற்று மசீதல் எனும் நபர் மறுமுனையில் இருந்து பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட கலந்துரையாடலில் இருவருக்கும் இடையே நர்பு மலர, நாளடைவில் தினந்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச தொடங்கியுள்ளனர். திருமணமான அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நர்பானது, நாளடைவிலேயே தகாத உறவாகவும் மாறியுள்ளது. மசீதல் ஹர்தோய் பகுதியில் வசித்து வர, சோனமின் கணவர் உத்தரபிரதேச மாநிலத்திற்கு வெளியே வேலை செய்து வந்துள்ளார். இதனால் இவர்கள் இடையேயான உறவு வேகமாக வளர்ந்துள்ளது.
காணாமல் போன சோனம்?
இந்த சூழலில் தான் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி சோனம் காணாமல் போயுள்ளார். தனது மருமகள் கடத்தப்பட்டு இருக்கலாம் என அவரது மாமனார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 6 பேர் அடங்கிய குழுவால் 2 ஆண்டுகள் தேடப்பட்ட பிறகும் சோனமை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தான் கடந்த ஜுன் மாதம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, சோனமின் தொலைபேசி எண்ணுக்கு வந்த 3 ஆயிரம் அழைப்புகளை போலீசார் பரிசோதித்தனர். அதில், குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து ஒரே ஒரு முறை மட்டுமே சோனமிற்கு அழைப்பு வந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
வெளிவந்த அதிர்ச்சி உண்மை:
குறிப்பிட்ட ஒற்றை செல்போன் எண் தொடர்பாக விசாரிக்கையில், வழக்கு குஜராத் வரை நீண்டுள்ளது. அங்கு சென்று விசாரித்ததில், குறிப்பிட்ட எண்ணை பயன்படுத்தி வந்த நபர் அதனை நிராகரித்த பிறகு, மற்றொரு பயனருக்கு அதனை ஒதுக்கிக் கொடுத்துள்ளதாக டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு கிடைத்த தரவுகளின்படி, அந்த எண் முதலில் மசீதல் பெயரில் பதிவாகி இருந்ததையும், ஆனால் அவரது உறவினர் ஒருவர் அதனை பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. ஆனால், அந்த எண்ணில் இருந்து கடைசியாக சோனமை தொடர்புகொண்டது மசீதல் தான் என்பதும் விசாரணையில் உறுதியானது.
கணவனுக்கு டாடா சொன்ன சோனம்
விசாரணையில் வெளியான தகவல்களின்படி, கணவனின் வீட்டை விட்டு வெளியேறிய சோனம், மசீதல் உடன் ரகசியமாக குடும்பம் நடத்த தொடங்கியுள்ளார். முதலில் டெல்லிக்கு சென்ற அந்த தம்பதி பிறகு மீண்டும் ஹர்தோய் பகுதிக்கு திரும்பியுள்ளனர். 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதியன்று இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் சகோதரர் ஷம்ஷீதுல் மற்றும் தந்தை அயூப் ஆகியோருடன் சேர்ந்து சோனத்தை மசீதல் அடித்துக் கொன்று அவரது உடலை கிணற்றில் வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
எலும்புக்கூடு மட்டுமே மிச்சம்
சம்ஷீதுல் மற்றும் அயூப் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மசீதலை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் அளித்த தகவலின்படி, கிணறு ஒன்றிலிருந்து சோனமின் எலும்புக்கூடு மீட்கப்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மசீதலுக்கு சோனம் அழுத்தம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் அதற்கு தயாராக இல்லை என்றும், இதனால் ஏற்பட்ட தகராறிலெயே கொலை நிகழ்ந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.





















