ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாகூர் என்ற மாவட்டம் இருக்கிறது. இந்த மாவட்டத்தின் அம்பாதி கிராமத்தில் 12 வயதில் ஒரு சிறுமியும், 10 வயதில் ஒரு சிறுவனும் வசித்துவந்தனர்.
இந்தச் சுழலில் அவர்கள் இருவரும் அப்பகுதியில் இருக்கும் வயல் வெளி பகுதி ஒன்றில் கடந்த வியாழக்கிழமை அன்று இறந்து கிடந்தனர். மேலும், அவர்களது கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் அவர்கள் கிடந்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து பாகூர் மாவட்ட காவல் நிலையதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் காவல் துறையினர் தங்களது விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் சிறுமி, சிறுவருடைய உறவினர் மீது சந்தேகம் எழுந்தது. அதனையடுத்து அவரது உறவினரை பிடித்து விசாரித்துவருகின்றனர். இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை மாலை சிறார்களை அவரது உறவினர் தனது வீட்டிற்கு அழைத்தார் என அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், பாகூர் மாவட்ட எஸ்.பி இச்சம்பவம் தொடர்பாக பேசுகையில், கிராமத்தில் உள்ள ஒரு வயலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மைனர் பெண் மற்றும் பையனின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் கண்கள் பிடுங்கப்பட்டிருந்தன. சிறுமிக்கு 12 வயதும், பையனுக்கு 10 வயதும் இருக்கும்.
இந்தக் கொலையானது தனிப்பட்ட விரோதத்தால் நடந்துள்ளதா என்பன உள்ளிட்ட பலகோணங்களிலும் விசாரணை நடந்துவருகிறது. இது தொடர்பாக உறவினர் ஒருவரிடமும் விசாரித்துவருகிறோம்” என்று கூறினார்.
சிறார்கள் இரண்டு பேர் மர்மமான முறையில் கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Oviya leave BB Ultimate: கடைசி நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்! பிக்பாஸில் இருந்து விலகிய ஓவியா?! இதுதான் காரணமாம்!
Chennai: கசந்த காதல் திருமணம்! பிறந்தநாளைக்கு ப்ளான் போடாத போதை கணவர்! தற்கொலை செய்து கொண்ட மனைவி