சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் சாமுவேல் (21) பெயிண்டன் வேலை செய்து வருகிறார் . கடந்த நான்கு மாதத்திற்கு முன்னால் அதே பகுதியை சேர்ந்த தனுஜா (20) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று தனுஜாவின் பிறந்தநாள் என்பதால் சாமுவேலிடம் தன்னை வெளியே அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் மது போதையில் இருந்த சாமுவேல் தனுஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

இதனால் மன உளைச்சலில் இருந்த தனுஜா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த சங்கர்நகர் போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் திருமணமான 4 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



 

இருந்தும் காவல்துறையினர் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கும் என்றால் என்ற கோணத்திலும் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர் . வரதட்சனை ஏதாவது கேட்டு வற்புறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதா என பெண் வீட்டார் தரப்பிலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. 

 



இதுகுறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தபோது, கணவன் மனைவி இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். தற்போது நடைபெற்றுள்ள முதற்கட்ட விசாரணையில் காதல் திருமணம் ,செய்து கொண்ட இருவருக்கிடையே பெரிய அளவில், எந்த வித சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருந்து வந்துள்ளனர். திருமணமாகி சில மாதங்களில் இந்த சம்பவம் நடைபெற்ற இருப்பதால், வரதட்சணை கொடுமை உள்ளிட்டவை ஏதாவது காரணமாக இருக்கிறதா என்ற கோணத்திலும் தற்போது விசாரணை நடத்தி வருகின்றோம். இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தனர். 

 



 

 


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050 .

 

 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண