தேர்தல் முன் விரோதம்; மீன் வியாபாரி வீட்டை நொறுக்கிய அதிமுக பிரமுகர்!
உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக மீன் வியாபாரியிடம் வம்பிழுத்து அவரது வீட்டை அடித்து நொறுக்கிய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தில் ஏரி மீன் இலவசமாக கேட்டு கொடுக்க வில்லை என்று மாட்டு தீவன வைக்கோல் மீது தீ வைத்து எரிக்கப்பட்டது .வீடு அடித்து நொறுக்கப்பட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென் சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (40). அதே கிராமத்தில் உள்ள ஏரியில் மீன்களை பிடிப்பதற்கு குத்தகை எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முரளி (50) என்பவர், மீன்களை இலவசமாக தரும்படி ஆனந்தராஜியிடம் கேட்டுள்ளார். பணம் கொடுத்தால் தான் மீன்களை தருவேன் என அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமாக அங்கிருந்து புறப்பட்ட முரளி, அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை என்பவரிடம் மீன்கள் தராதது குறித்து கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இரவு ஆனந்தராஜ்யின் வீட்டிற்கு சென்ற ஏழுமலை உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் , அவருடன் தகராறு செய்து சராமரியாக தாக்கியுள்ளனர் அதனை தடுக்க வந்த ஆனந்தராஜியின் தாய் காமலா என்பவரையும் தாக்கியுள்ளனர். வீட்டின் கண்ணாடி, வீட்டின் முன்பக்கம் இருந்த வீட்டின் பொருட்களை அடித்து துவம்சம் செய்த அவர் வீட்டீன் அருகே உள்ள வைக்கோல் போரையும் எரித்து விட்டு 7 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பித்து விட்டனர் .
இதையடுத்து ஆனந்தராஜ் காவல்துறைக்கு தொலைப்பேசி முலம் தகவல் அளித்தார். அதன் பேரில் தகவலறிந்த வந்த வந்தவாசி வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் ஏழுமலை உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அது மட்டுமின்றி அசம்பாவிதங்களை தவிர்க்க தென்சேந்தமங்கலம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாட்டு தீவனமான வைக்கோல் போரை எரிந்ததால் மாடுகள் உணவின்றி தவித்து வருகின்றன. படுகாயம் அடைந்த ஆனந்தராஜ் மற்றும் கமலா ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஏழுமலை போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தோல்வின் போது ஆனந்த ராஜ் வேறு நபருக்கு ஆதரவாக செயல்பட்டார் என்பதால் மீன் விவகாரத்தை வைத்து அவரை வம்பிழுத்து தாக்கியதும், வீட்டையும் அடித்து காலி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகர் ஏழுமலை மற்றும் 7 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.