மேலும் அறிய

திருச்சியில் பட்டப்பகலில் தொழிலதிபர் வீட்டில் 63 பவுன் நகை, ரூ. 62 ஆயிரம் கொள்ளை

திருச்சியில் பட்டப்பகலில் துணிகரமாக வீட்டிற்குள் புகுந்து 63 பவுன் நகைகள், ரூ.62 ஆயிரம் இருந்த பையை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிங்கப்பூரில் வசித்து வரும் தொழிலதிபர் முகமது சம்சுதீனின் மனைவி பச்சிமுத்துஜெகரா (வயது 62). இவருக்கு திருச்சி வ.உ.சி. சாலை பாலாஜி அபார்ட்மெண்ட்டில் சொந்தமாக வீடு உள்ளது. பச்சிமுத்துஜெகரா 3 மாதங்களுக்கு ஒரு முறை திருச்சிக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் ராமநாதபுரத்தில் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த டிசம்பர் மாதம் பச்சிமுத்துஜெகரா திருச்சிக்கு வந்தார். பின்னர் வங்கி பெட்டகத்தில் இருந்த 63 பவுன் நகைகளை எடுத்து தனது வீட்டில் பீரோவில் வைத்திருந்தார். பின்னர், கடந்த வாரம் ராமநாதபுரத்துக்கு நகைகளை போட்டுக்கொண்டு, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த நகைகளையும், ரூ.62 ஆயிரத்தையும் ஒரு பையில் வைத்துக்கொண்டு திருச்சிக்கு கடந்த 2-ந் தேதி காலை 11 மணிக்கு வந்தார். அவர் வீட்டுக்கு வந்த நேரத்தில், அவருடைய சகோதரி சர்புன்னிசா (50) அவரை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், தான் கொண்டு வந்த நகைகள், பணம் இருந்த பையை வீட்டின் உள்ளே இருந்த மேஜையின் மீது வைத்து விட்டு, பக்கத்தில் உள்ள அறையில் தனது சகோதரியுடன் பச்சிமுத்துஜெகரா பேசிக்கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் பையில் உள்ள நகைகள், பணத்தை எடுத்து பீரேவில் வைப்பதற்காக பச்சிமுத்துஜெகரா சென்றபோது, மேஜையில் இருந்த பையை காணவில்லை. அதற்குள் யாரோ திருடிச்சென்றுவிட்டனர். 
 

திருச்சியில் பட்டப்பகலில் தொழிலதிபர் வீட்டில் 63 பவுன் நகை, ரூ. 62 ஆயிரம்  கொள்ளை
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவருடைய வீட்டில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை எடுத்து பார்த்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் பச்சிமுத்துஜெகராவை பின்தொடர்ந்து வந்ததும், பின்னர், அவர் நகை, பணம் வைத்திருந்த பையை திருடிக்கொண்டு செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து பச்சிமுத்துஜெகரா கொடுத்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து, 63 பவுன் நகைகள், ரூ.62 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget