மேலும் அறிய

மகளின் காதலரை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய பெற்றோர்கள்..! திருவாரூரில் பரபரப்பு

கோபமடைந்த கௌசல்யாவின் பெற்றோர் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து முகம்மது பெமினாஸின் தலை மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது மகன் முகம்மது பெமினாஸ் 23 வயது.  இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகள் கௌசல்யாவை (17) காதலித்து வந்துள்ளார். இதற்கு கௌசல்யாவின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளனர். தனது மகளை காதலிக்க கூடாது என முகம்மது பெமினாஸிடம் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். 
 
அதனையும் மீறி முகம்மது பெமினாஸ் கௌசல்யாவிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கௌசல்யாவின் தந்தை விஜயகுமார் மற்றும் தாய் தீபா இருவரும் இருசக்கர வாகனத்தில் முகம்மது பெமினாஸ் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளனர். அங்கு முகம்மது பெமினாஸ் மற்றும் அவரது பெற்றோர்களிடம் எங்களுடைய பெண்ணிடம் உங்கள் மகன் பழக வேண்டாம், நாங்கள் எங்கள் பெண்ணிற்கு வேறு ஒரு நபரை திருமணம் செய்ய உள்ளோம் என கூறியுள்ளனர். அதனை ஏற்காமல்  கௌசல்யாவை தான் திருமணம் செய்வேன் என முகம்மது பெமினாஸ் கூறியுள்ளார்.
 
கோபமடைந்த கௌசல்யாவின் பெற்றோர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து முகம்மது பெமினாஸின் தலை மற்றும் கை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த முகம்மது பெமினாஸை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் முகம்மது பெமினாஸின் உறவினர்கள் அடியக்கமங்கலத்தில் கௌசல்யாவின் தந்தை விஜயகுமார் வைத்துள்ள மருந்தகத்தை கற்கள் மற்றும் கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த திருவாரூர் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மகளின் காதலரை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய பெற்றோர்கள்..! திருவாரூரில் பரபரப்பு
 
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பதுங்கியிருந்த கௌசல்யாவின் தந்தை விஜயகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி தீபாவவும் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் கௌசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பெமினாஸ் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது. காயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெமினாஸ் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகளின் காதலரை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய பெற்றோர்கள்..! திருவாரூரில் பரபரப்பு
 
மகளை காதலித்த இளைஞரை வீடு தேடிச் சென்று தாயும், தந்தையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கௌசல்யாவின் தந்தை விஜயகுமாரையும், தாய் தீபாவையும் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget