Crime: கஞ்சா விற்பனை செய்த 3 வாலிபர்கள் கைது ; கஞ்சா வேட்டையில் இறங்கிய கோட்டகுப்பம் போலீஸ்
விழுப்புரம் : கோட்டகுப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபர்கள் கைது
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுக்குப்பம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையில், நடுக்குப்பம் மாரியம்மன் கோவிலில் சேர்ந்த தேசமுத்து (வயது 23) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 110 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் கோட்டகுப்பம் ரவுண்டானா அருகே போலீசார் கோட்டக்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்துக்கிடமான நின்று இருந்த இரண்டு பேரை போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கோட்டகுப்பம் ஜெனித் நகர் பகுதியை சேர்ந்த முஹம்மது ரபிக், மற்றும் புதுச்சேரி நாவற்குப்பம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவர்களை சோதனை செய்ததில் 240 கிராம் கஞ்சாபெட்டலங்கள், இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்து செய்யப்பட்டு மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கோட்டகுப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்