மேலும் அறிய

Crime: குற்றாலம் அருகே அரசு காப்பு காட்டில் தேக்குமரம் கடத்தல் - இருவர் கைது

குற்றாலம் அருகே மீண்டும் தேக்குமரத்தை வெட்டி கடத்திய கும்பல் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் வனச்சரக எல்கைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு காப்புகாட்டில் ஏராளமான அரிய வகை மரங்கள் பாதுகாக்கப்பட்டு  வருகிறது. மேலும் அங்குள்ள  நீர்த்தேக்கத்தை ஒட்டியிருக்கும் பகுதிகளில் அதிக அளவு தேக்கு மரங்கள் வளர்ந்திருக்கின்றன. பல லட்சக்கணக்கில் மதிப்புடைய இந்த தேக்கு மரங்கள் அவ்வப்போது சட்டவிரோதமாக சிலர் வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த சூழலில் அரசு காப்பு காட்டில் உள்ள தேக்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குற்றாலம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், குற்றாலம் வனத்துறையினர் அரசு காப்புகாட்டில் உள்ள தேக்கு மரத்தை வெட்டி கடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பழைய குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 36) என்ற நபர் தேக்கு மரத்தை வெட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து  கண்ணதாசனை கைது செய்து விசாரணை செய்தனர்.

அப்போது விசாரணையில் அவரும், அவருடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த காட்டுராசா (வயது 35) என்ற நபரும் தேக்கு மரத்தை வெட்டி சட்டவிரோதமாக கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களை செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். பல லட்சம் மதிப்புள்ள தேக்குமரத்தை சட்டவிரோதமாக  கடத்திய இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல கடந்த டிசம்பர் மாதம் குற்றாலம் வனச்சரகத்திற்குட்பட்ட மோட்டை நீர்த்தேக்க பகுதியில் சிலர் சட்டவிரோதமாக தேக்குமரம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து வன அலுவலர் சீதாராமன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சட்டத்திற்கு புறம்பாக தேக்கு மரங்களை வெட்டி கடத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருப்பதை கண்ட அதிகாரிகள் அது தொடர்பாக விசாரணை நடத்தினர்,  விசாரணையில் முகமது கனி, பொன்னுத்துரை ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.  மேலும் சில நபர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது,  அவர்களை பிடிக்கும் பணியிலும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது தேக்குமரம் கடத்த உடந்தையாக இருந்த புளியரை வனவர் செல்லத்துரை வனக்காப்பாளர் சார்லஸ் ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தேக்குமரத்தை வெட்டி கடத்திய கும்பல் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget