Crime: 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - சென்னையில் நிகழ்ந்த கொடூரம்
அப்பா அம்மாவை கொலை செய்து விடுவேன் எனக்கூறி 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
அப்பா அம்மாவை கொலை செய்து விடுவேன் எனக்கூறி 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.
10ம் வகுப்பு மாணவி:
சென்னையை அடுத்து உள்ள குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விக்கி. 22 வயதான விக்கி 15 வயதான 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னால் ஒரு நாள் மாணவி பள்ளிக்கு தனியாக சென்று கொண்டு இருக்கையில், இருசக்கர வாகனத்தில் வந்த குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்கி, மாணவியை மிரட்டி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளார். அதன்பின்னர், யாரும் இல்லாத தனது நண்பனின் வீட்டிற்கு 10ஆ,ம் வகுப்பு மாணவியை அழைத்துச் சென்ற விக்கி, அவருக்கு குடிக்க மதுபானம் தந்துள்ளார். மேலும், அதில் வெள்ளை நிறத்தில் உள்ள பவுடரை கலந்து கொடுத்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை:
இதை மிரட்டி குடிக்க வைத்துள்ளார். இதனைக் குடித்த மாணவி மயக்கம் அடைய, சுயநினைவு இல்லாத மாணவியை விக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சுயநினைவுக்கு திரும்பிய மாணவி தனக்கு நேர்ந்த நிலை குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர் மாணவி விக்கி என்ற அந்த இளைஞருடன் பேசவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விக்கி, மாணவியை தொடர்ந்து பேசுமாறு கேட்டுள்ளார். ஆனால் மாணவி மறுத்துள்ளார்.
ஆனால், மாணவியை தொடர்ந்து தன்னுடன் பேசுமாறு தொந்தரவு செய்து வந்த விக்கி ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து, ‘நீ என்னுடன் பேசாவிட்டால், உனது அப்பா, அம்மாவை கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். ஏற்கனவே தன்னை பாலியல் வன்கொடுமை செய்த விக்கி, தனது பெற்றோரை கொலை செய்தாலும் செய்து விடலாம் என்ற அச்சத்தில், மாணவி விக்கியுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
தொடர்ந்த கொடூரம்:
மாணவி தன்னுடன் பேச ஆரம்பித்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்கி, மீண்டும் மீண்டும் மாணவியை தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு, மிரட்டி மாணவியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளார். ஏற்கனவே அதிர்ச்சியிலும், பயத்திலும் இருந்த மாணவி, தனக்கு தொடர்ந்து நடந்த பாலியல் வன்கொடுமையால் மிகுந்த மன அழுத்ததிற்கு சென்றுள்ளார். இதனால் பள்ளியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வந்துள்ளார். தனது தோழிகளிடமும் ஆசிரியர்களிடமும் சகஜமாக பழகாமல் இருந்துள்ளார்.
மாணவியின் இந்த நடவடிக்கை குறித்து கவனித்த ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளிக்க, பெற்றோர்கள் விசாரணை நடத்திய பின்னர், மாணவி கதறி அழுதுள்ளார். அதன் பின்னர், தனக்கு நடந்ததை தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் வலைவீச்சு:
அதன் பின்னர், குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்கி மீது, சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விக்கியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.