ஒரே வாரத்தில் இரண்டு பேரை திருமணம் செய்த ஆசிரியை! 8 வருட காதலுக்கு ஷாக் கொடுத்த காதலி!

காவலர்கள் இரண்டாவது திருமணத்தைத் தடுத்து நிறுத்தி மணமக்களையும் உறவினர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது மணப்பெண் முதல் கணவனை தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

Continues below advertisement

ஆசிரியையாகப் பணியாற்றி வரும் பெண் ஒருவர் தனது முதலாவது திருமணம் முடிவடைந்து ஏழே நாள்களில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Continues below advertisement

காதல் திருமணம் முடித்து பெற்றோருக்காக மற்றொரு திருமணம்

29 வயதான இந்தப் பெண் எட்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்த நபரை கடந்த ஜூன் 23ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பின்னர் பெற்றோரின் விருப்பத்தின்படி மாவனெல்லயைச் சேர்ந்த மணமகனை ஜூன் 30ஆம் தேதி, கம்பளையில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் படிக்க: Crime : மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி.. கொதித்தெழுந்த மக்கள்.. என்ன நடந்தது?

இந்நிலையில், இவரது முதல் கணவர் அளித்த புகாரையடுத்து காவலர்கள் இரண்டாவது திருமணத்தைத் தடுத்து நிறுத்தி மணமக்களையும் உறவினர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தபோது மணப்பெண் முதல் கணவனை தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

கோபமடைந்த இரண்டாவது மணமகன்

இதனையடுத்து இரண்டாவது திருமணத்தைப் பதிவு செய்து கொண்டிருந்த பதிவாளரிடம் முதல் கணவருடன் நடைபெற்ற திருமணப் படங்கள், திருமண சான்றிதழ் ஆகியவற்றைக் காட்டி தகவலைத் தெரிவித்து காவலர்கள் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். அதன் பின்னரே அப்பெண் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் பெற்றோருக்கும் உறவினருக்கும் அஞ்சி இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளவிருந்த நபர் மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாகத் தெரிவித்து அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: பதவியை தவறாக பயன்படுத்தி ரூ.58 கோடியை அபேஸ் செய்த முன்னாள் அமைச்சர்: எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?

திருவாரூர்: பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்த மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றிய கணவன்; ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்

காரைக்குடி: வீட்டுக்குள் ஆட்கள் இருக்கும் போதே ஆட்டையப் போட்டு மூட்டயகட்டிய திருடர்கள் - ஜன்னல் வழியே 40 பவுன், 50 ஆயிரம் கொள்ளை !

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola