மேலும் அறிய

Tanjai Auditor Murdered : மாநகராட்சி கழிவறை காண்ட்ராக்ட் முன்விரோதம்..! ஆடிட்டர் வெட்டிப்படுகொலை..! தஞ்சையில் கொடூரம்

மாநகராட்சி கழிவறையை கான்ட்ராக்ட் எடுக்கும் முன்விரோதத்தில் ஆடிட்டர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், பொது கழிவறை, குளியலறைகள் ஏலம் விடப்பட்டன. இதை ஏலம் எடுக்க பலர் மத்தியிலும் போட்டா போட்டி நடந்தது. அதிக வருமானம் கொடுக்கும் என்பதால் புதிய நபர்களும் ஏலத்தில் பங்கேற்று பல இடங்களில் ஏலம் எடுத்துள்ளனர். இதன்காரணமாக, ஏலம் எடுப்பவர்கள் மத்தியில் புகைச்சலையும், பகையையும் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை கரந்தையில் உள்ள சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன். அவருக்கு வயது 45. இவர் ஆடிட்டராக உள்ளார். இவர் தன் வீட்டுக்கு அருகில் விவசாயப் பண்ணை ஒன்று வைத்துள்ளார். இதில் ஆடு, கோழி, தென்னை மரங்கள் உட்பட பல மரங்களை பராமரித்து வளர்த்து வருகிறார். இந்த பண்ணைக்கு எதிரில் மாநகராட்சி குளியல் மற்றும் கழிவறை கட்டிடம் உள்ளது.

இந்த கழிவறையும் பொது ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த ஏலத்தில் ஆடிட்டர் மகேஸ்வரனும் கலந்து கொண்டுள்ளார். ஏலத்தில் ஆடிட்டர் மகேஸ்வரனுக்கு சாதகமாக முடிந்து அந்த மாநகராட்சி கழிவறை கான்ட்ராக்ட் அவருக்கு கிடைத்துள்ளது. இதனால் ஏலத்தில் பங்கேற்ற ஒரு தரப்பினருக்கும், மகேஸ்வரனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. 

Tanjai Auditor Murdered : மாநகராட்சி கழிவறை காண்ட்ராக்ட் முன்விரோதம்..! ஆடிட்டர் வெட்டிப்படுகொலை..! தஞ்சையில் கொடூரம்

இந்த நிலையில், ஆடிட்டர் மகேஸ்வரன் நேற்று இரவு தனது பண்ணையை வலம் வந்து மரங்களை எல்லாம் பார்த்துவிட்டு பண்ணையிலே உள்ள அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் மகேஸ்வரனின் பண்ணைக்குள் புகுந்துள்ளது. மகேஸ்வரன் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அறைக்குள் அந்த கும்பல் புகுந்தது. 

மகேஸ்வரன் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் மகேஸ்வரனை சரமாரியாக வெட்டிக் கொன்றது. மகேஸ்வரனை வெட்டிக்கொன்ற உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. ஆடிட்டர் மகேஸ்வரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது மகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் மகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tanjai Auditor Murdered : மாநகராட்சி கழிவறை காண்ட்ராக்ட் முன்விரோதம்..! ஆடிட்டர் வெட்டிப்படுகொலை..! தஞ்சையில் கொடூரம்

மேலும் இதுகுறித்து மகேஸ்வரன் மனைவி நிஷா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், கழிவறை கட்டிடம் ஏலம் எடுப்பதில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget