மேலும் அறிய

Crime : நொறுங்கிய கார்.. தப்பியோடிய நடிகை ஆர்த்தியின் கணவர்.. விபத்து நடந்தது எப்படி?

சென்னையில் காரை விபத்திற்குள்ளாக்கிய நகைச்சுவை நடிகர் கணேஷ்கர் போலீசாருக்கு பயந்து தப்பியோடி தலைமறைவாக உள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கணேஷ்கர். பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தியின் கணவர் இவர். இவர்கள் வளசரவாக்கத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் கணேஷ்கர் தனது காரில் நேற்று பட்டினம்பாக்கத்தில் உள்ள லூப் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கே இருந்த சாலைத்தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பக்கம் மிக கடுமையாக சேதமடைந்தது. கார் சாலைத்தடுப்பில் மோதியதில் பயங்கர சத்தம் ஏற்பட்டது. மேலும், கார் விபத்திற்குள்ளானதால் காருக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகன ஓட்டியும் தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளானார். கார் தடுப்பில் மோதிய சத்தம் கேட்டதால் உடனே அக்கம்பக்கத்தினர் சாலையில் கூட ஆரம்பித்தனர்.


Crime : நொறுங்கிய கார்.. தப்பியோடிய நடிகை ஆர்த்தியின் கணவர்.. விபத்து நடந்தது எப்படி?

இதனால், பயமடைந்த நடிகர் கணேஷ்கர் காரை அப்படியே சாலையிலே விட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். பின்னர். விபத்தை ஏற்படுத்திய நடிகர் கணேஷ்கரை அருகில் உள்ள மருத்துவமனையில் தேடினர். ஆனால், அவர் அருகில் இருந்த எந்த மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதியாகவில்லை என்று தெரியவந்தது.

பின்னர், இரவு முழுவதும் அந்த வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நடிகர் கணேஷை போலீசார் தேடினர். ஆனால், அவர் எந்த மருத்துவமனையிலும் அனுமதியாகவில்லை என்று தெரியவந்தது. வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், நடிகர் கணேஷ் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது மனைவி ஆர்த்தி போலீசாரிடம் கூறியுள்ளார்.


Crime : நொறுங்கிய கார்.. தப்பியோடிய நடிகை ஆர்த்தியின் கணவர்.. விபத்து நடந்தது எப்படி?

நடிகர் கணேஷ்கரை பிடித்தபிறகுதான் அவர் மதுபோதையில் சென்று காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினாரா? அல்லது அதிவேகமாக சென்று காரை விபத்திற்குள்ளாக்கினாரா? என்பது தெரியவரும். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் கணேஷ்கரை தேடி வருகின்றனர்.

நடிகர் கணேஷ்கரை பிரபல இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகர்களின் நண்பனாக பல படங்களில் நடித்துள்ளார். பின்னர், 2009ம் ஆண்டு நடிகை ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். தற்போது தம்பதிகள் இருவரும் பல படங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
" யாரிடமாவது சொன்னால் கொலை செய்திடுவேன் " சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரியாணி கடை ஓனர்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
Embed widget