'பணம், பணம்னு அலையாதிங்க..' கல்பாக்கம் அணுமின்நிலைய பணியாளர் தற்கொலை..! கடிதத்தில் எழுதியிருப்பது என்ன?
கல்பாக்கம் அணுமின் நிலைய அறிவியல் உதவியாளர் தனது குடியிருப்பில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவர் பகுதியை சேர்ந்த வேணு என்பவரது, மகன் கோபிநாத் (28) . கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் ஒரு பகுதியாக இயங்கி வரும் FRFCF என்ற பிரிவில் பணிக்கு சேர்ந்து, தற்போது அறிவியல் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
அணுமின்நிலைய பணியாளர்:
இவருக்கு அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் வீடு வழங்கியதால் , பெற்றோருடன் தங்கி வசித்து வந்தனர். கோபிநாத்துக்கும் மாமல்லபுரம், பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம், நாள் குறிக்கப்பட்டு அதற்கான அழைப்பிதழ்களை, வைப்பதற்காக அவரது பெற்றோர்கள் சென்னையில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
தூக்கிலிட்டு தற்கொலை
இந்நிலையில், நேற்று ரஜினிகாந்த் நடித்து வெளியாகி உள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இரவு காட்சியை பார்த்துவிட்டு வந்து தனியாக உறங்கியுள்ளார். காலை விடிந்ததும், தந்தை வேணு அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் செல்போனை எடுக்காததால், சந்தேகம் அடைந்து, தனது புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு போன் செய்து அங்கே சென்று பார்க்கும் படி கூறியுள்ளார்.
அவரது உறவினர்கள் சென்று கதவை தட்டி பார்த்து நீண்ட நேரம் கதவை திறக்காததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது கோபிநாத் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு பொங்கிய நிலையில், இருப்பதை பார்த்து அதிர்ச்சியற்று வேணுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கல்பாக்கம் போலீசாருக்கும் தகவல் தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோபிநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை கைப்பற்றிய கடிதம்
இதனை தொடர்ந்து வீட்டை சோதனை செய்த போலீசார் கோபிநாத் கைப்பட எழுதிய கடிதத்தை எடுத்து படித்துப் பார்த்தபோது . அதில், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பொண்ணுக்கு, என்னை மன்னித்துவிடு நான் உன்னை விட்டு செல்கிறேன். நீ என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், பணம் பணம் என்று அலைய வேண்டாம், பணம் மட்டும் வாழ்க்கை இல்லை, பணத்தை தாண்டி நிறைய சந்தோஷங்கள் உள்ளது. என்றும், தான் இறந்த பிறகு மத்திய அரசால் வழங்கப்படும் செட்டில்மெண்ட் பணம் முழுவதையும் தனது தாயிடமே ஒப்படைத்து விடுங்கள் என்றும், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், எல்லோரும் சந்தோஷமா இருங்க இந்த பூமியில் யாரும் பெரிய ஆள் கிடையாது, எல்லோரையும் விட்டு விடைபெறுகிறேன் இப்படிக்கு வேற வழி இல்லாத கோபிநாத் என்ற ஆத்மா என அதில் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)