மேலும் அறிய

தவெக பிரமுகரின் 'காம லீலைகள்'; செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள்; சிக்கியது எப்படி? சிக்க வைத்தது யார்?

பொள்ளாச்சி சம்பவம் போல் சேலத்தில் நடந்தேறிய கொடூரம். பெண்களை வீடியோ எடுத்து மிரட்டின் தவெக நிர்வாகி கைது

சேலம்: பணப் பிரச்சனை உள்ள பெண்ணுக்கு உதவி செய்து அவர்களிடம் நெருக்கமாக பழகி வீடியோ எடுத்து மிரட்டிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். அவரது செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சேலத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் தொடர்பாக பேசிய வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் பரவியது. அதில், நெய்க்காரப்பட்டி அருகே புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் குறித்து பேசி உள்ளார். இதுகுறித்து அறிந்த சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில் குமார் கிரி, சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோ குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.

ஆடியோவால் சிக்கிய தவெக நிர்வாகி

இதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த ஆடியோவை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பின்னர் கொண்டலாம்பட்டி போலீசார் மணிகண்டனை பிடித்து அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ காட்சிகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

தவெக பிரமுகரின் 'காம லீலைகள்'; செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள்; சிக்கியது எப்படி? சிக்க வைத்தது யார்?

இதுகுறித்து போலீசார்  கூறுகையில், சேலம் பட்டை கோவில் பகுதியை சேர்ந்த பெண் சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அந்த பெண்ணுக்கு திருமணமாகி கணவர் இருந்த நிலையில் இரு குழந்தைகள் உள்ளதாகவும் அவருக்கு கடன் பிரச்சனை ஏற்படவே நெய்க்காரப்பட்டியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக ஒன்றிய நிர்வாகி மணிகண்டன் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார். அந்த பெண்ணுக்கு நிதி நிறுவனத்தில் கடனாக பணம் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் மணிகண்டன் அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். அப்படி நெருங்கி பழகியதை மணிகண்டன் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

தவெக பிரமுகரின் 'காம லீலைகள்'; செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள்; சிக்கியது எப்படி? சிக்க வைத்தது யார்?

ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சி

சில நாட்களுக்கு முன் அந்தப் பெண்ணை யாரும் இல்லாத இடத்திற்கு மீண்டும் மணிகண்டன் அழைத்துள்ளார். அந்தப் பெண் சென்ற நிலையில், மணிகண்டனின் செல்போனை எதேர்ச்சையாக எடுத்துப் பார்த்தார். அப்போது ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் தன்னுடைய வீடியோவும் இருப்பதை பார்த்து திடுக்கிட்டு அந்த வீடியோக்களை அழித்துவிட்டு அங்கிருந்து மணிகண்டனிடம் சொல்லாமல் கிளம்பி விட்டார். பின்னர் மணிகண்டன் மொபைல் போனில் அழைத்த போது அந்தப் பெண் பேச மறுத்துள்ளார்.

மேலும், அந்தப் பெண் பேசிய ஆடியோவில் பணப் பிரச்சினை உள்ள பெண்களாக பார்த்து அவர்களுக்கு உதவுவது போல அந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்து அதை மணிகண்டன் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த பெண்களின் வீடியோவை காட்டி மிரட்டி அவரது நண்பர்களின் ஆசைக்கு இணங்க கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும் விபச்சாரத்திற்கும் ஈடுபடுத்தி உள்ளார்.

Also Read| MLA Pallavi: இணையத்தில் மோசமாக சித்தரிக்கப்படும் MLA பல்லவி.. குவியும் கண்டனம்.. மனசாட்சியே இல்லையா?

மளிகை கடை நடத்தி வருகிறார்

இந்த நிலையில் அவரது மொபைல் போனை ஆய்வு செய்ததில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ காட்சிகள் இருந்தன. மற்ற பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என நினைத்து அந்த வீடியோவில் இருந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டனை கைது செய்துள்ளதாகவும் மணிகண்டன் வீட்டு அருகே மளிகை கடை நடத்தி வருவதாகவும் இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹன்ஸ் புகையிலைப் பொருட்களை விற்றதால் ஏற்கனவே அம்மாபேட்டை கொண்டலாம்பட்டி அன்னதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மணிகண்டனை விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மணிகண்டன் தவெக நிர்வாகி கிடையாது

இந்த நிலையில், பெண்களின் ஆபாச வீடியோக்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மணிகண்டன் தவெக நிர்வாகி இல்லை என்று சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.மணிகண்டன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சேலம் தெற்கு மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, புத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த எம்.மணிகண்டன் என்பவர் பாலியல் குற்றங்களில்  ஈடுபட்டார் என்கிற செய்தி சமூகவலைதளம் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரியவந்தது. மணிகண்டன் என்ற நபருக்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. கட்சியின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியை பரப்பி வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Embed widget