மேலும் அறிய

சத்தமில்லாமல் நடந்த சர்வதேச கடத்தல்! சென்னை விமான நிலையத்தில். விடிய விடிய நடந்த சோதனையில் பரபரப்பு!

ரூ.6 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல், சென்னை விமான நிலையத்தில் 2 வடமாநில பெண்கள் கைது 

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை தனிப்படை அதிகாரிகள் நேற்று இரவு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கிரீன் சேனலில் மாட்டிய கடத்தல் குருவிகள்

அப்போது தாய்லாந்திலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த தனியார் பயணிகள் விமானத்தின் பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சுற்றுலா விசாவில் மும்பையிலிருந்து தாய்லாந்து சென்று திரும்பிய சுமார் 40 வயதுடைய இரு வடமாநிலப் பெண்கள், தாய்லாந்திலிருந்து நேரடியாக மும்பை செல்லாமல் சென்னைக்கு வந்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் குடியுரிமைச் சோதனையை முடித்து, தங்களின் சூட்கேஸ்களை எடுத்துக்கொண்டு, சுங்கத் தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை எனக் கூறி 'கிரீன் சேனல்' வழியாக வெளியேற முயன்றனர்.

சூட்கேஸ்களுக்குள் மறைக்கப்பட்ட போதைப்பொருள்

சந்தேகத்தின் பேரில் அவர்களை நிறுத்தி சுங்க அதிகாரிகள் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்தனர். இதையடுத்து அவர்களின் சூட்கேஸ்களை ஸ்கேன் செய்து பார்த்தபோது, போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே சூட்கேஸ்களைத் திறந்து சோதனையிட்டதில், 7 பார்சல்களில் மொத்தம் 6 கிலோ எடை கொண்ட உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

ரூ. 6 கோடி மதிப்பு: தீவிர விசாரணை

பறிமுதல் செய்யப்பட்ட இந்த ஹைட்ரோபோனிக் கஞ்சாவின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.6 கோடியாகும். போதைப்பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட 2 வடமாநிலப் பெண்களையும் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இவர்கள் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் "கடத்தல் குருவிகளாக" செயல்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள முதன்மை நபர்கள் யார் என்பது குறித்து சுங்கத்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

" எவன் கூட தொடர்பு ? " சந்தேகத்தால் சித்ரவதை !! கணவன் கண்முன்னே தீக்குளித்த மனைவி
ஏற்காடு மலையில் கிடந்த சடலம்.. உயிரிழந்த சிறுமி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? புகைப்படம் வெளியீடு
ஏற்காடு மலையில் கிடந்த சடலம்.. உயிரிழந்த சிறுமி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? புகைப்படம் வெளியீடு
சட்டத்தின் பிடியில் சிக்கிய 'ராக்கெட் ராஜா': பொறையார் திருட்டு வழக்கில் முக்கிய தீர்ப்பு..
சட்டத்தின் பிடியில் சிக்கிய 'ராக்கெட் ராஜா': பொறையார் திருட்டு வழக்கில் முக்கிய தீர்ப்பு..
எவ்வளவு சொல்லியும் விடாத மாமனார்.. கர்ப்பமான மருமகள்.. விஷயம் தெரிந்த காதல் கணவர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
எவ்வளவு சொல்லியும் விடாத மாமனார்.. கர்ப்பமான மருமகள்.. விஷயம் தெரிந்த காதல் கணவர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
தென்மாநிலங்களின் ஆதரவோடு ”ஒரே நாடு ஒரே தேர்தல்”, கனவை எட்டிப்பிடிக்கும் BJP.. முதல் படி Delimitation
Delimitation Bill: பாஜக-விற்கு ஆதரவு எதிரொலி; மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா திமுக?
Delimitation Bill: பாஜக-விற்கு ஆதரவு எதிரொலி; மத்திய அமைச்சரவையில் இடம்பெறுகிறதா திமுக?
திமுகவிற்கு குட்பாய் சொல்லும் முன்னாள் அமைச்சர்? ”நரித்தனத்திற்கு தென்மாநிலங்கள் பலி ஆகிவிடக்கூடாது”
திமுகவிற்கு குட்பாய் சொல்லும் முன்னாள் அமைச்சர்? ”நரித்தனத்திற்கு தென்மாநிலங்கள் பலி ஆகிவிடக்கூடாது”
TVK Vs DMK: உதயநிதி பேச்சு.. பாயிண்ட் பிடித்து அடித்த தவெக, இப்போது பதில் கிடைத்துவிட்டதா? என திமுகவிற்கு கேள்வி
உதயநிதி பேச்சு.. பாயிண்ட் பிடித்து அடித்த தவெக, இப்போது பதில் கிடைத்துவிட்டதா? என திமுகவிற்கு கேள்வி
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
“பாஜகவை எதிர்க்க காங்கிரஸுக்கு திராணி, தெம்பு இல்லை” அப்ப கூட்டணி உறுதியா? - தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக திடீர் ஆதரவு ஏன்? - தங்கம் தென்னரசு சொன்ன முக்கிய காரணம்!
டயர் இல்லாததால் 1,500 அரசுப் பேருந்துகள் முடக்கம்; விபத்து அபாயம்! - அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை!
டயர் இல்லாததால் 1,500 அரசுப் பேருந்துகள் முடக்கம்; விபத்து அபாயம்! - அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கடும் எச்சரிக்கை!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Thiruparankundram: தீபம் ஏற்றியது ரொம்ப சந்தோஷமாக இருக்கு... அடுத்து என்ன? நீதிபதி வைத்தியநாதன் சொன்ன முக்கிய விஷயம்!
Embed widget