மேலும் அறிய

அள்ள அள்ள பணம்... கிலோ கணக்கில் தங்கம்.. ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் பறிமுதல்!

15 மணி நேர தொடர் சோதனையின் முடிவில் நகராட்சி பொறியாளர் வீட்டில் சிக்கிய பணம், நகைகளின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை.

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் செல்வகுமார். இவர் ராணிப்பேட்டை நகராட்சியின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையினர், திருவண்ணாமலை மாவட்ட DSP மதியழகன் தலைமையில் திடீரென நேற்று சோதனைநடத்தினர். சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய சோதனையில் கட்டுக்கட்டுக்காக கணக்கில் வராத பணம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் நிலஆவணங்களை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


அள்ள அள்ள பணம்... கிலோ கணக்கில் தங்கம்.. ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் பறிமுதல்!

தற்போது ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வரும் செல்வகுமார் என்பவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை வேலூர் மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது உதவிபொறியாளரான செல்வகுமார் மீது தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை கிராமத்தில் உள்ள பொறியாளர் செல்வகுமார் பல்வேறு வகைகளில் லஞ்சம் பெறுவதாகவும், இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு துறையின் DSP மதியழகன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் திடீரென அதிரடியாக காலை 7 மணிக்கு செல்வகுமார் வீட்டில் நுழைந்து தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வந்தனர். 


அள்ள அள்ள பணம்... கிலோ கணக்கில் தங்கம்.. ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் பறிமுதல்!

காலை தொடங்கிய சோதனை தொடர்ந்து இரவு வரை என சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. 15 மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் செல்வகுமார் வீட்டிலிருந்து உரிய ஆவணங்கள் இன்றியும் கணக்கில் வராத 10,73,520 ரூபாய் வரைவோலையாகவும், 23 லட்சத்தி 32 ஆயிரத்தி 770 ரூபாய் ரொக்கமாகவும், 193.75 சவரன் தங்கநகைகள், 2.17 கிலோ வெள்ளி மற்றும் பல கோடி மதிப்பிலான நில சொத்து ஆவணங்கள் இருப்பதை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைப்பற்றினர் இதற்க்கு உரிய ஆவணங்களை பொறியாளர் செல்வகுமார் காண்பிக்காததால் அவை பறிமுதல் செய்யப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. மேலும் பொறியாளர் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அள்ள அள்ள பணம்... கிலோ கணக்கில் தங்கம்.. ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் பறிமுதல்!

நகராட்சி பொறியிளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையின் திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாகவும், தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Netanyahu Spoke to Modi: போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Driving

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
EPS DMK: எடப்பாடி மிது திமுக ப்ரூட்டல் அட்டாக் - புது பட்டப்பெயர், எல்லாமே புஸ்வானங்கள் தான் என சாடல்
EPS Vs Stalin: நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
நான் உண்மையான விவசாயியா.? நீங்க உண்மையான விவசாயியா.? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி
Netanyahu Spoke to Modi: போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?
Trump Warns Iran: மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்
Air India Black Box: சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
சீக்கிரமே உண்மை தெரிஞ்சுடும் - விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
Annamalai's Plan: கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
கூட்டணிக்குள் குண்டு வைத்த அண்ணாமலை.!! அதிமுக-வை சீண்டும் வகையில் பேச்சு - உடைக்க திட்டமா.?
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
வெளியானது 10ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்?- வழிமுறைகள் இதோ!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. இதோ கடைசி வாய்ப்பு- டிஎன்பிஎஸ்சி அழைப்பு
Embed widget