மேலும் அறிய

Crime: “நீ எனக்கு மனைவியே இல்லை”..- நான் அவன் இல்லை பாணியில் 5 பெண்களை திருமணம் செய்து மோசடி

5 பெண்களை திருமணம் செய்து ஒரு நபர் ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் தொடர்பான மோசடி செய்திகள் அடிக்கடி வருவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் ஒரு நபர் 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தின் மேலே குப்பத்தைச் சேர்ந்தவர் காய்தரி(35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “எனக்கும் புதுச்சேரியின் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த  சீனு என்ற தெய்வநாயகத்திற்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தின் போது அவருக்கு வரதட்சணையாக 6 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை வழங்கப்பட்டது. 

திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே நாங்கள் சேர்ந்து இருந்தோம். அதன்பின்னர் நான் கர்ப்பம் அடைந்தேன். எனினும் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன்காரணமாக நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தோம். அவர் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை அடிக்கடி மிரட்டி வந்தார். அதனால் நான் அவரிடம் பேசாமல் இருந்தேன். 

இந்தச் சூழலில் எனக்கு குழந்தை பிறந்தது. அதன்பின்னர் தெய்வநாயகத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். அவர் பதிலளிக்கவில்லை. அப்போது  அவர் பற்றியை உண்மை எனக்கு தெரியவந்தது .அதாவது தெய்வநாயகம் ஏற்கெனவே அனிதா,தேவி, கனகவல்லி என்ற மூன்று பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. அத்துடன் தற்போது அவர் 5வதாக வம்பாகீர்ப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெய்வநாயகத்திடம் கேட்டப்போது அவர் நீ என்னுடைய மனைவியே இல்லை என்று கூறினார்.

அத்துடன் அவர் என்னை அடியாட்களை வைத்து கொலை செய்ய திட்டம் திட்டியுள்ளதாக தெரிகிறது. அவர் என்னிடம் திருமணத்திற்கு முன்பாக அனிதா என்ற பெண்ணுடன் அவருக்கு விவகாரத்து கிடைத்து விட்டது என்று கூறியிருந்தார். எனினும் அவரிடம் இருந்து இவருக்கு விவாகரத்து கிடைக்கவில்லை. ஆகவே இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்தப் புகார் தொடர்பாக காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தெய்வநாயகத்தின் பெயரில் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. 5 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget