தாம்பரம் மாணவி கொலை: கொலையாளி குறித்த போலீஸ் அறிக்கை வெளியீடு!
ராமச்சந்திரன் (என்ற)ராமு மேற்படி சுவேதாவை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சுவேதா ராமச்சந்திரன் (எ) ராமுவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
தாம்பரம் ரயில்வே சாலையில் கல்லூரி மாணவி சுவேதா கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரை காதலித்த ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ராமச்சந்திரனின் கைது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதோ அந்த அறிக்கை அப்படியே உங்கள் பார்வைக்கு...
சென்னை, குரோம்பேட்டை, பாரதிபுாரம், ரவிருஎண்15/19 என்ற முகவரியில் சுவேதா, வ/20, து/பெ.மதியழகன் என்பார் வசித்து வந்தார். இவர் தனியார் கல்லூரியில் மருத்துவ ஆய்வக பட்டய படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று (2300-2027) மதியம் 1.30 மணியளவில் தனது தோழி சங்கீதாவுடன் சேர்ந்து கிழக்கு தாம்பரம், இரயில்வே காலனி ரோட்டில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சுவேதாவிற்கு ஏற்கனவே அறிமுகமான ராமச்சந்திரன் (எ) ராமு. தோழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுவேதாவை வெளியாக குத்திவிட்டு, தன்னுடைய கழுத்தையும் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள், காயம் பட்ட இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். சுவேதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்த ராமச்சந்திரன் (எ) ராமுவை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர். இது குறித்து கொலையுண்ட சுவேதாவின் தந்தை மதியழகன் S-15 சேலையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
S-115 சேலையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் (எ) ராமு, வ/25, த/பெ குணசேகரன், எண்.1/92. ஜீவாநகர், திருக்குவளை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம் என்பவரை இன்று (24.09.2021) கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் (எ) ராமு, பொறியியல் படிப்பு முடித்து சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், ராமச்சந்திரன் (என்ற)ராமு மேற்படி சுவேதாவை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சுவேதா ராமச்சந்திரன் (எ) ராமுவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த ராமச்சந்திரன் (எ) ராமு சம்பவத்தன்று ஈவேதாவை செல்போனில் தொடர்பு கொண்டு தனியாக பேசவேண்டும் எனக் கூறி சம்பவயிடத்திற்கு வரவழைத்து தன்னிடம் ஏன் பேச மறுக்கிறாய் என கேட்ட போது, ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் (எ) ராமு, சுவேதாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராமச்சந்திரன் (எ) ராமு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.