பாலியல் புகார், அடுத்து சிக்கப்போகும் அதிமுக பிரமுகர் யார்...?

பாதிக்கப்பட்ட பெண் அந்த அதிமுக பிரமுகர் மீது விரைவில் புகார் கொடுக்கவுள்ளார். அதன்பிறகுதான் சாந்தசொரூபியாக வலம் வரும் அந்த மலைக்கோட்டை மாநகர் பிரமுகரின் உண்மைமுகம் தெரியவரும்

FOLLOW US: 

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார் மீதான சூடு அடங்குவதற்குள், மற்றொரு அதிமுக பிரமுகர் மீதும் இதேபோன்றதொரு புகாரை கொடுக்க ஒரு பெண் தயாராகி வருகிறார்.

பாலியல் புகார், அடுத்து சிக்கப்போகும் அதிமுக பிரமுகர் யார்...?

மலைக்கோட்டை மாநகரை சேர்ந்த பிரமுகர்தான் அடுத்து சிக்கலில் மாட்டப்போவது. காவல்நிலையம் சென்று தன்னால் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக செயல்பட்டு, பஞ்சாயத்து பேசி வருகிறாராம் அந்த ம.கோ.பி. ஆனாலும், மணிகண்டன் மீதான வழக்கில் போலீசார் தீவிரம் காட்டி வருவது, மலைக்கோட்டை பிரமுகரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருவதால்,  புகார் கொடுத்து, மலைக்கோட்டை பிரமுகர் செய்த கொடுமைகளையெல்லாம் அம்பலப்படுத்திவிடவேண்டும் என்று நினைக்கிறாராம். இனி, தன்னைப்போன்று எந்த பெண்ணும் இவரால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அவர், என்ன மிரட்டல்கள், எதிர்ப்புகள் வந்தாலும் புகார் கொடுத்துவிட்டு, மீடியாக்களிடம் அவர் பற்றி சொல்லிவிட வேண்டும் என்று முடிவும் செய்துவிட்டாராம்.

பாலியல் புகார், அடுத்து சிக்கப்போகும் அதிமுக பிரமுகர் யார்...?

அதற்காக, தனது நட்பு வட்டாரத்தில் உள்ள நண்பர்கள், வழக்கறிஞர் துணையுடன் புகார் கடிதத்தையும், சாந்தினி காட்டியதுபோல புகைப்படங்கள், ஸ்கிரின்ஷாட்களையும் தயார் செய்து வருகிறார். புகாரை திருச்சியிலேயே அளிக்கலாமா அல்லது சென்னைக்கு நேராக வந்து டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்துவிடலாமா என யோசித்து வரும் அந்த பெண் சொல்லப்போகும் குற்றச்சாட்டால், மலைக்கோட்டை மாநகர் பிரமுகர் கைதாகும் நிலைக்கு கூட செல்லலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏற்கனவே இந்த அதிமுக பிரமுகருக்கும் திமுகவினருக்கும் ஏழாம் பொறுத்தமாக இருக்கும் நிலையில், திமுகவினர் துணையையும் நாடியுள்ளாராம். 

இவர் அளிக்கப்போகும் புகார்களுக்கு பிறகுதான் அமைதியாக, சாந்த சொரூபியாக வலம் வரும் அந்த குணவானின் உண்மைமுகம் தெரியவரும் என்கிறார்கள்

Tags: Trichy Manikandan Sexual complaint Former Tamil Nadu minister Former Tamil Nadu minister manikandan

தொடர்புடைய செய்திகள்

”மாப்பிள்ளை பிடிக்கலையா?” : சொந்த மகளையே எரிக்கமுயன்ற பெற்றோர், சகோதரன்..!

”மாப்பிள்ளை பிடிக்கலையா?” : சொந்த மகளையே எரிக்கமுயன்ற பெற்றோர், சகோதரன்..!

Sexual Harrasment : ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர் : ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி..!

Sexual Harrasment : ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர் : ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்ட சூப்பர் சிங்கர் பாடகி..!

தலைமறைவாக இருக்கும் ஆபாச யூ ட்யூபர் மதனின் மனைவி கிருத்திகாவை ஜூன் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

தலைமறைவாக இருக்கும் ஆபாச யூ ட்யூபர் மதனின் மனைவி கிருத்திகாவை ஜூன் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

SivaShankar Baba | தொழிலதிபர் சிவசங்கர், ”சிவசங்கர் பாபா” ஆனது எப்படி?

SivaShankar Baba | தொழிலதிபர் சிவசங்கர், ”சிவசங்கர் பாபா” ஆனது எப்படி?

"சிவசங்கர் பாபாவை தூக்கில்போட்டு கொல்லுங்கள்” - கொதித்த பிரபல நடிகை..!

டாப் நியூஸ்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

மதுரை : தாய்மாமாவுடன் திருமண நிச்சயம் : படிக்கும் கனவு பறிக்கப்பட்ட சிறுமி தற்கொலை..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!