மேலும் அறிய

”நடு ரோட்டில் மோதல்” - கோவை நகரை அதிரவைத்த வடமாநில இளைஞர்கள்...

கோவை காந்திபுரத்தில் நடு ரோட்டில் மோதிய வடமாநில இளைஞர்கள்: போலீசார் விசாரணை.

கோவை காந்திபுரம் பகுதியில் நடு ரோட்டில் வடமாநில இளைஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை நகரில் உள்ள தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கட்டுமான பணிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் கோவை காந்திபுரம் பகுதியில் சில வடமாநில இளைஞர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நடு ரோட்டில் பெல்ட்டால் தாக்குதல்

முதலில் வாய்த்தகராறாக தொடங்கிய இந்த வாக்குவாதம், பின்னர் மோதலாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள், தங்களது இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டுகளை கழற்றி மாறி மாறி தாக்கியதாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தாலும், சாலையில் சென்ற சில வாகன ஓட்டிகளும், அருகிலிருந்த உள்ளூர்வாசிகளும் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

நடு ரோட்டில் நடந்த இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த உள்ளூர்வாசிகள் தலையிட்டு, மோதலில் ஈடுபட்ட இளைஞர்களை சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

போலீசார் விசாரணை 

இந்த மோதல் சம்பவத்தின் வீடியோ காட்சிகள், அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், வைரலான வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடு ரோட்டில் சட்டத்தை மீறி சண்டையில் ஈடுபட்டது குறித்து சம்பந்தப்பட்ட இளைஞர்கள் யார், எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், எதற்காக மோதல் ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget