Rediroff.com எனப் பெயரிடப்பட்டுள்ள மோசடி ஒன்று நடக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த மோசடியானது மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான செயலியில் சில நாட்களாகப் பரவி வருகிறது. அறிக்கைகளின்படி, மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் மோசடியைப் பயன்படுத்தி பயனர்களின் வங்கி மற்றும் பிற விவரங்கள் போன்ற அவர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைக் கொள்ளையடிக்கிறார்கள். ஸ்பேம் இணைப்பு, iOS மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களுடன் Windows PCகளையும் இது பாதிக்கலாம்.


இந்த மோசடி எப்போது தொடங்கியது என்று தெரியவில்லை. ஆனால் CNBCயில் உள்ள ஒரு அறிக்கை, இந்த விடுமுறைக் காலத்தில், விலையுயர்ந்த பரிசுகளை வழங்குவதாகக் கூறி அவர்களைக் கவர்ந்திழுப்பதன் மூலம் ஒரு பெரிய குழுவினர் செயல்பட்டதாக குறிப்பிடுகிறது. அறிக்கையின்படி, ஸ்கேமர்கள் வாட்ஸ்அப் பயனர்களுக்கு இணைப்பை அனுப்புகிறார்கள். மேலும் ஒரு பயனர் இணைப்பைக் கிளிக் செய்தவுடன், ஒரு இணையதள பக்கம் திறக்கிறது.




அதில் பயனர்கள் ஒரு கணக்கெடுப்பை நிரப்புவதன் மூலம் வெகுமதியைப் பெறலாம் என்று கூறுகிறது. அதனையடுத்து கேட்கப்படும் சில கேள்விகளுக்குப் பதிலளித்த பிறகு, மீண்டும் ஒரு இணையதள பக்கம் திறக்கிறது. அங்கு அவர்களின் பெயர், வயது, முகவரி, வங்கித் தகவல் மற்றும் பிற தனிப்பட்ட தரவு போன்ற சில தகவல்களை நிரப்புமாறு கேட்கப்படுவார்கள்.


எங்களையே உள்ளே விடமாட்டிங்களா? ரகளையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பாஜகவினருக்கு செக் வைத்த போலீஸ்...!


இந்த விவரங்கள் மோசடியான பரிவர்த்தனைகள் அல்லது பிற சட்டவிரோத செயல்களைச் செய்ய தவறாகப் பயன்படுத்தப்படலாம். ஸ்கேமர்கள் பயனரின் சாதனத்தில் தேவையற்ற விஷயங்களை செய்யலாம். ஒரு பயனர் Rediroff.ru இணைப்புடன் ஒரு செய்தியைப் பெறும்போது, ​​அவர்கள் உடனடியாக அதை ஸ்பேம் எனப் புகாரளித்து அதை நீக்க வேண்டும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: க்ளிக்.. க்ளிக்! நச்சுனு 21 போட்டோ! 2021ல் பிரதமர் மோடியின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்பட கலெக்‌ஷன்!


18 வயது இளம்பெண்ணை 18 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை! - குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்


சிவகாசி வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !


காதல் திருமணம்.. போலீஸ் ஸ்டேஷனில் மனம் மாறிய பெண் - தற்கொலை செய்துகொண்ட புது மாப்பிள்ளை!