பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் 2021 ஆம் ஆண்டு எடுத்த எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களை வெளியிடப்பட்டுள்ளன. புகைப்பட பிரியர் ஆன மோடியை சுற்றி எப்போதும் கேமரா சுழன்றுகொண்டே இருக்கும். அவற்றில் முக்கிய நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொகுத்து அவரது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் பிரதமர் மோடி வாரணாசி சென்று காசி விஸ்வநாதர் கோவில் வாசலில் பேசியது, கோயம்புத்தூர் சென்று பத்மஸ்ரீ பாப்பம்மாளை சந்தித்தது, ராஷ்டிரபதி பவன் விஜயங்கள், வாடிகன் சிட்டிக்கு சென்று போப்பாண்டவரை கண்டது ஆகிய எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 21 படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெளியிடப்பட்டுள்ள 21 படங்களை கீழே காணலாம்.



சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடந்த 'சிந்தன் சத்ரா' கவுன்சில் மீட்டில் பின்னால் கடைசியில் அமர்ந்திருந்த புகைப்படம்



பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் அலுவலகத்தில் குழந்தைகளை சந்தித்தபோது...



மேற்கு வங்கம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இளம்பெண் ஒருவர் வாழ்த்து தெரிவித்தபோது...



உத்தரபிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, திவ்யாங் என்ற மாற்றுத்திறனாளியை சந்தித்தபோது...



பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது...



புதுதில்லியில் வாராந்திர அமைச்சர்கள் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்புகளை எடுத்தபோது...



பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்தபோது...



உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ராஷ்டிரபதி பவனில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது… 



மணிநகர் ஸ்ரீ சுவாமிநாராயண் காடி சன்ஸ்தானின் ஆன்மிகத் தலைவர் ஆச்சார்யா ஸ்ரீ ஜிதேந்திரியபிரியதாஸ்ஜி சுவாமிஜி மகராஜ், பிரதமர் நரேந்திர மோடியை ஆசிர்வதித்தபோது...



பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் படகில் பயணம் செய்தபோது...



ராஷ்டிரபதி பவனில் பத்மஸ்ரீ துளசி கவுடாவுடன் பிரதமர் நரேந்திர மோடி. கர்நாடகாவைச் சேர்ந்த 70 வயதான ஹலக்கி பழங்குடிப் பெண் 30,000 மரக்கன்றுகளை நட்டபோது...



உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் திறப்பு விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது…



தமிழகத்தின் கோயம்புத்தூரில் 105 வயது விவசாயியும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பாப்பம்மாளிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றபோது…



விக்டோரியா நினைவிடத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, 'பராக்ரம் திவாஸ்' கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டபோது...



பிரதமர் நரேந்திர மோடி தனது தீபாவளிப் பயணத்தில் ராணுவ வீரர்களுடன் ரஜோரி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள நவ்ஷேராவுக்குச் சென்றபோது...



புதுதில்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின் போது, ​​பெண்கள் ஹாக்கி அணி வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி...



பிரைவேட் ஈக்விட்டி மற்றும் வென்ச்சர் கேபிடல் துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒரு இலகுவான தருணத்தைப் பகிர்ந்து கொண்டபோது...



உத்திரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப்பயணத்தில் சிறுபான்மை சமூகத்தினர் அவரை சந்தித்தபோது...



உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடிய போது…



உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடிய போது…



வாடிகன் நகரில் பிரதமர் நரேந்திர மோடியை போப் பிரான்சிஸ் வரவேற்றபோது...