விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டியலில் வழிவிடுமுருகன் என்பவருக்கு சொந்தமான  பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பெரிய வகை பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்படும்.  இந்த நிலையில் புத்தாண்டு தினமான நேற்று பட்டாசு தொழிற்சாலையில் வழக்கம்போல் பணியை துவங்கியபோது, மூலப்பொருட்கள் கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.



இந்த விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டமாகின. இந்த நிலையில் குமார், பெரியசாமி, செல்வம் என்ற வீரகுமார் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலும் ஒருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதும் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்த சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இதில் 4 நபர்களுக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல் துறையினரும் வருவாய் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினமான நேற்று பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பிடித்தவர்களை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 



 

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்,” சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து நடத்திய விசாரணையில், ஆலையின் உரிமையாளர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலையின் உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விசாரணையின் அடிப்படையில் முழு தகவல் அளிக்கப்படும்” என்றனர்.