விழுப்புரத்தை அடுத்த வளவனூர் பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் வெற்றிவேல் (வயது 20), லாரி டிரைவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த தரணி (19) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு தரணியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தரணியும், வெற்றிவேலும் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி கடலூர் திருவந்திபுரம் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு தரணியும், வெற்றிவேலும் அங்கிருந்து புறப்பட்டு மணக்கோலத்தில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
சாத்தான்குளம் விவகாரத்தை சல்லடை போட்டு வெளிப்படுத்திய பத்திரிகையாளர் பிரபாகருக்கு Red Ink விருது!
மனுவை பெற்ற அதிகாரிகள், அவர்கள் இருவரையும் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரு வீட்டாரை வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தரணி, தனது பெற்றோருடன் செல்வதாகவும், வெற்றிவேலுடன் செல்ல விருப்பமில்லை என்றும் போலீசாரிடம் கூறி எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுத்தார். அதன் பின்னர் தரணியை அவரது பெற்றோர், உறவினர்கள் அழைத்து சென்றனர்.
காதல் மனைவி தன்னுடன் வாழாமல் அவரது பெற்றோருடன் சென்று விட்டாரே? என்று எண்ணி மிகுந்த மன வேதனையில் இருந்த வெற்றிவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
”முதல்வர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்” - சாமி தரிசனத்திற்கு பின் செல்லூர் கே.ராஜூ பேட்டி
இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வெற்றிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வெற்றிவேலுவின் தாய் சாந்தி, வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் திருமணமான மறுநாளே லாரி டிரைவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்