கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியை சேர்ந்தவர் 40 வயதான ஹுசைன். இவர் கடந்த 2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுவனை தனியாக அழைத்து சென்றுள்ளார்.  வீட்டிற்கு அருகிலுள்ள குளக்கரையில் சிறுவனுக்கு ஆபாச வீடியோவை காண்பித்து அந்த சிறுவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


இந்தநிலையில், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு குறித்து ஜனமைத்திரி காவல் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இந்த  விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கிறோம் என்பதை அந்த 10 வயது சிறுவன் உணர்ந்துள்ளான்.  


இதுகுறித்து அந்த நிகழ்ச்சியின்போது காவல்துறையினரிடம் சிறுவன் தகவல் தெரிவித்துள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் ஹுசைனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் ஹுசைன் 4 க்கு மேற்பட்ட சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. அந்த 4 சிறுவர்களும் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 




சிறுவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாம்பி அதிவேக நீதிமன்றத்தில் ஹுசைனை ஆஜர்படுத்தினர். ஹுசைன் மீது குற்றம் நிரூபிக்கப்படவே, குற்றவாளிக்கு தண்டனையாக  33 ஆண்டுகள் சிறையும், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளித்தார்.


இதேபோல், கர்நாடகம் மாநிலம் விஜயநகரா அருகே உள்ள கூட்லகியை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவர் ஏழு வயது சிறுவனிடம் நேற்று முன்தினம் தனியாக அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கவே, கூட்லகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அந்த வாலிபரை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து எஸ்.பி., அருண்விசாரித்து வருகிறது. புத்தாண்டு அன்று முதல் வழக்காக இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண