மேலும் அறிய

பர்கூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட 9 பேர் கைது

பர்கூரில் தனியார் பள்ளி மாணவிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பள்ளியின் தாளாளர் உட்பட 9 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை பள்ளியில் தேசிய மாணவர் படை (என்சிசி) மாணவிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், 17 மாணவிகள் பள்ளியிலேயே தங்கி பயிற்சி பெற்றனர். இதில் 13 வயது எட்டாம் வகுப்பு மாணவி பள்ளியின் வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் சக மாணவிகளுடன் உறங்கியுள்ளார். அப்போது என்சிசி பயிற்சியாளர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் 13 வயதான எட்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக சிவராமன் உள்ளார். எட்டாம் தேதி அதிகாலை 3 மணி அளவில் 13 வயது எட்டாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனக்கு நடந்த கொடுமையை குறித்து பள்ளி முதல்வரிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்த போதும், அதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என அவர் அலட்சியமாக தெரிவித்துள்ளனர். 


பர்கூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட 9 பேர் கைது

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் 

இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி மாணவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் நேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர்  என்சிசி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் வெஸ்லி, ஆசிரியர்கள் ஜெனிபர், சக்திவேல் மற்றும் சிந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான முக்கிய நபரை சிவராமன் மற்றும் சுதாகரை காவல்துறையினர் தேடி வந்தனர்.


பர்கூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - நாம் தமிழர் கட்சி நிர்வாகி உட்பட 9 பேர் கைது

போக்சோ சட்டத்தில் 9 பேர் கைது 

இதனிடையே இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சிவராமனை காவல் துறையினர் 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் கோவையில் பதுங்கியிருந்த சிவராமனை காவல்துறையினர்  கைது செய்தனர். அப்போது சிவராமன் காவல்துறையிடமிருந்து தப்ப முயன்றபோது தடுமாறி விழுந்ததால் அவரது வலது காலில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன், பள்ளியின் முதல்வர் சதீஷ் குமார், தாளாளர், பயிற்சியாளர் உள்ளிட்ட 9 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget