மேலும் அறிய

சென்னையில் மேயர் பிரியா பெயரை சொல்லி பணம் வசூல் ?

மேயர் பிரியா நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறி பண வசூலில் ஈடுபட்ட நபர்கள் கைது.

பணம் கேட்டு மிரட்டல்

சென்னை அம்பத்துார் பேருந்து நிலையம் அருகே கணினி பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் ஷேக் முகமது அலி (வயது 40). இவர் மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலராக பொறுப்பு வகிக்கிறார். கடந்த 21 - ம் தேதி தொடர்பு கொண்ட திருமுல்லைவாயலைச் சேர்ந்த பிரகாஷ் ( வயது 40 ) என்பவர் தான் மாநகராட்சி உதவி கமிஷனராக இருப்பதாகவும் அம்பத்துாரில் மேயர் பிரியா பங்கேற்கும் நிகழ்ச்சியின் செலவுக்கு , 10,000 ரூபாய் தர வேண்டும் எனக் கூறி மிரட்டியுள்ளார்.

மேயர் நிகழ்ச்சி பொய்

அதிர்ச்சி அடைந்த ஷேக் முகமது அலி , பிரகாஷின் கூட்டாளியான பர்னபாஸ் ( வயது 48 ) என்பவரிடம், 2,000 ரூபாய் கொடுத்துள்ளார். மேயர் நிகழ்ச்சி நடப்பதாக பிரகாஷ் கூறியது பொய் என தெரிந்தது. இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதோடு, பிரகாஷ் மற்றும் பர்னபாஸை அம்பத்துார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்து அனுப்பி வைத்த நிலையில் உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் மோசடியில் ஈடுபட்ட இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருமணம் செய்ய காதலன் மறுப்பு. 7 - வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷிதா ( வயது 25 ) , வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையைச் சேர்ந்த தர்ஷன் ( வயது 26 ) என்பவரும் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன் பிப்ரவரி 12ம் தேதி கிரீம் சென்டர் என்ற ஹோட்டலில் , இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன் ஹர்ஷிதாவிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என தர்ஷன் கூறியுள்ளார்.

காதலன் கண் முன்னே குதித்து தற்கொலை

இந்நிலையில் , ஹர்ஷிதா தன் அக்கா கணவர் பிரபுல் ( வயது 37 ) வழக்கறிஞர் ராஜேஷ் ( வயது 42 ) ஆகியோரை அழைத்துக் கொண்டு தர்ஷன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஹர்ஷிதா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தர்ஷனிடம் கெஞ்சியதாக கூறப்படுகிறது. ஆனால் தர்ஷன் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் மனமுடைந்தவர், அக்குடியிருப்பின் ஏழாவது மாடிக்கு சென்று அங்கிருந்து காதலன் தர்ஷன் கண் முன்னே கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அடிப்படை உரிமையான குடிநீருக்கே இத்தனை போராட்டமா? சீர்காழி அருகே ஒரு கிராமத்தின் கண்ணீர் கதை!
அடிப்படை உரிமையான குடிநீருக்கே இத்தனை போராட்டமா? சீர்காழி அருகே ஒரு கிராமத்தின் கண்ணீர் கதை!
"இதுதான் எதிர்பார்த்த மாற்றமா?" - சீர்காழி ரேஷன் கடையில் புழு அரிசி விநியோகம்; இளைஞர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!
தூய்மைப் பணியாளர்களுக்கு நேர்ந்த கொடுமை! நாகூர் கந்தூரி விழா முடிந்து திரும்பியபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்!
தூய்மைப் பணியாளர்களுக்கு நேர்ந்த கொடுமை! நாகூர் கந்தூரி விழா முடிந்து திரும்பியபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்!
டேட்டிங் செயலி மூலம் இளைஞர்களிடம் பணம் பறிப்பு – புதுக்கோட்டையில் 2 பேர் கைது!
டேட்டிங் செயலி மூலம் இளைஞர்களிடம் பணம் பறிப்பு – புதுக்கோட்டையில் 2 பேர் கைது!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam 2026 LIVE: இன்னும் சில மணி நேரங்களில் ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.. ABP NADU-இல் இணைந்திருங்கள்!
Tiruvannamalai Deepam 2026 LIVE: இன்னும் சில மணி நேரங்களில் ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்.. ABP NADU-இல் இணைந்திருங்கள்!
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
CM Vijay: ஆட்சியை நடத்த இத்தனை சவால்களா? விஜய் சந்திக்கும் 8 சவால்கள் - ஓர் அலசல்
Kallakurichi MLA: மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
மாவட்ட ஆட்சியர் விவகாரம் - பாலியல் தொல்லை பிரிவில் TVK MLA அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குச் செல்லுமா இந்தியா? அப்போ இதெல்லாம் நடக்கனும் ப்ரோ!
Kallakurichi MLA: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
கள்ளக்குறிச்சி MLA சர்ச்சை.. குற்றம் நிரூபணமானால் இவ்ளோ தண்டனை இருக்கா? சட்டம் சொல்வது என்ன?
Embed widget