சீர்காழி அருகே கந்து வட்டி கேட்டு பயங்கர ஆயுதங்களுடன் வீட்டை முற்றுகையிட்ட நபர்கள் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த  கீழமூவர்கரை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி என்பவரின் மனைவி 58 வயதான லட்சுமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் வினோத் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல அதே பகுதியை சேர்ந்த சம்பந்த மூர்த்தி மனைவி அஞ்சம்மாள்  என்பவரிடம் 1 ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து சம்பந்த மூர்த்தி மனைவி அஞ்சம்மாள் மூலம் லட்சுமி மகன் வினோத் சிங்கப்பூர் சென்று அங்கு சரியான வேலை இல்லாததால் 15 நாட்களில் மீண்டும் ஊர் திரும்பினார்.


Thalapathy 68: அறிமுகத்திலேயே அமர்க்களப்படுத்திய வெங்கட்பிரபு: வீடியோவுடன் தளபதி 68 அப்டேட்..! ரசிகர்கள் செம குஷி..!





இதுகுறித்து அஞ்சம்மாளிடம் லட்சுமி கேட்ட போது, மீண்டும் நல்ல வேலைக்கு அனுப்பிவைத்தாக கூறி வந்துள்ளார். இதனிடையே அஞ்சம்மாளிடம் லட்சுமி 20 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் வினோத்தை மீண்டும் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யாமல், அஞ்சம்மாள் லட்சுமியிடம் கொடுத்த 20 ஆயிரம் ரூபாய் கடனை திருப்பி கேட்டுள்ளார். அதற்காக லட்சுமி எனது மகனை வெளிநாட்டு அனுப்ப  எண்ணிடம் வாங்கிய 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயில் அந்த 20 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொள்ளவும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக 20 ஆயிரம் ரூபாய்க்கு வட்டியுடன் சேர்ந்து 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தர செல்லி தனது கணவர் உள்ளிட குடும்பத்தினருடன் இரும்பு கம்பி, கத்தி, கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தனது வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.


VK Pandian IAS: அமைச்சருக்கு இணையான பதவி - தமிழக ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனுக்கு ஒடிசா முதல்வர் கொடுத்த ஆஃபர்




இதுகுறித்து வீடியோ ஆதாரங்களுடன் லட்சுமி திருவெண்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கு அவரின் புகாரை பெறாமல் காவல்துறையினர் அஞ்சம்மாள் தரப்பினருக்கும் ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 19 -ம் தேதி புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் பெறபட்டு நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் காவல்துறையினர் சார்பில் எடுக்கப்படவில்லை என  வேதனை தெரிவிக்கும் லட்சுமி,


Wasim Slams Pakistan: ”தினமும் ஆளுக்கு 8 கிலோ ஆட்டு கறி; உடற்தகுதி எங்கே?” - பாகிஸ்தான் வீரர்களை சாடிய வாசிம் அக்ரம்




தனது புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். மேலும் 20 ஆயிரம் ரூபாய் கடனுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த சம்பவமும் அது குறித்து வீடியோ காட்சி அளித்தது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறையினர் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Leo box office collections Day 5: இந்தியாவில் தாறுமாறு வசூல்.. 5 நாட்களில் லியோ படத்தின் வசூல் என்ன தெரியுமா?