மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் வீதியில்,  கடந்த 27ம் தேதி தனியார் திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி திறக்கப்பட்டது. இந்நிலையில் திருமண மண்டபத்தில் பயன்படுத்திய கழிவுநீர் வெளியேற்றுவதற்காக அனுமதியின்றி நகராட்சி சாலையை இரவில் உடைத்து பிளாஸ்டிக் பைப் அமைத்துள்ளனர். மேலும், புதிதாக கட்டப்பட்ட வரும் மழை நீர் வடிகாலை உடைத்து சேசப்படுத்தியுள்ளனர். 




இதனை அறிந்த சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகராட்சியில் எந்த அனுமதியும் பெறாமல் நகராட்சிக்கு சொந்தமான சாலை மற்றும் கால்வாயை சேதப்படுத்தியதால் தமிழ்நாடு நகராட்சி சட்டம் 1920ன் படி ஜப்தி செய்யப்படுவதாக நோட்டீஸ் ஒட்டிய நகராட்சி ஊழியர்கள், ஆணையர் வாசுதேவன் முன்னிலையில்  திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.


Keratosis Pilaris: சிக்கன் சருமம்போல் ஒரு நிலை.. குளிர்காலத்தில் பாதிக்குதா? என்ன செய்யலாம்?




திறந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் திருமண மண்டபத்தை நகராட்சி நிர்வாகம் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த மண்டபம் அமைந்துள்ள அதே சாலையில் கடந்த ஒரு வாரமாக காலமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி பொதுமக்களுக்கு பெரும் இன்னல்களை ஏற்படுத்திவரும் சூழலில், அதனை கழிவுநீர் வாகனம் மூலம் அப்புறப்படுத்தவும், அதனை சரி செய்யவும் வழிவகை செய்யாத நகராட்சி ஆணையர், தற்போது அதே இடத்தில் புதிதாக திறக்கப்பட்ட  திருமண மண்டபத்தை மட்டும் பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்த சம்பவம் திருமண மண்டபத்தினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் பேரம் படியவில்லையா?” என்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Tirupur: திருப்பூரில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: 2 வடமாநிலத்தவர்கள் கைது - அதிரடி காட்டும் காவல்துறை..!




மேலும் அப்பகுதி ஆளும் கட்சி பிரமுகரால் வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அந்த வடிகால் வாய்க்கால்கள் பணிகளை முடிக்க முடியாத சூழல் நிலவுதாகவும், அதனை மீது நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வழி இன்றி அதனை திசை திருப்பும் நோக்கி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற