Thirumavalavan: போலீசை விமர்சித்த விவகாரம்: திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் இடைநீக்கம்; திருமா நடவடிக்கை

Thirumavalavan : காவல்துறையை அவதூறாக பேசிய திருவண்ணாமலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பகலவனை கட்சியில் இருந்து 3 மாத காலத்திற்கு நீக்குவதாக திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார்.

Continues below advertisement

காவல்துறையை அவதூறாக பேசிய திருவண்ணாமலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  மாவட்ட செயலாளர் பகலவனை கட்சியில் இருந்து 3 மாத காலத்திற்கு நீக்குவதாக திருமாவளவன் ட்வீட் செய்துள்ளார். 

Continues below advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ”திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கும் காவல்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது பாராட்டுதலுக்குரியதே. எனினும், கட்சியின் நலன் மற்றும் மக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு அவற்றின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளை மீறாமல் செயலாற்றுவது இன்றியமையாததாகும். அவ்வாறின்றி சிலர் பொதுவெளியில் நடந்து கொண்ட போக்குகள் கவலையளிப்பவையாக உள்ளன. எனவே, இதற்கு பொறுப்பேற்க வேண்டிய மாவட்ட செயலாளர் பகலவன் மூன்று மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார். இது குறித்து முழுமையாக விசாரிப்பதற்கு மாநிலப் பொறுப்பாளர் ஒருவர் தலைமையில் விசாரணைக் குழு பின்னர் நியமிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement