குளிர்காலத்தில் பல்வேறு பண்டிகைகள் மற்றும் விடுமுறைகள் வருவதால் நாம் பயணங்கள் மேற்கொள்வது அதிகரிக்கும். ஆனால் இந்த குளிர் பருவம் நம் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் ஏற்றதாக இருக்காது. ஈரப்பதம் அதிகமாகவும், வெப்பநிலை குறைவாகவும் இருப்பதால், சென்சிட்டிவ் ஸ்கின் கொண்டவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குளிர்ந்த காலநிலையில், வறட்சி, அரிப்பு, குளிர்கால சொறி, தோல் தடிப்பு மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற பலவகைகளில் தோல் நிலைகள் மோசமடையலாம். பல நிபுணர்கள் மற்றும் தோல் மருத்துவர்கள், கெரடோசிஸ் பிலாரிஸ் (கடுமையான தோல் நோய்) நிகழ்வுகள் குளிர்காலத்தில் அதிகமாக வருவதாக குறிப்பிடுகின்றனர்.
அதென்ன கெரடோசிஸ் பிலாரிஸ்?
"சிக்கன் ஸ்கின் அல்லது ஸ்ட்ராபெரி ஸ்கின் என்றும் அழைக்கப்படும் கெரடோசிஸ் பிலாரிஸ், கரடுமுரடான புடைப்புகளின் திட்டுகளை ஏற்படுத்துகிறது. பொதுவாக கன்னங்களில், மேல் கைகள் மற்றும் தொடைகளில் காணப்படுகிறது. இந்த சிறிய புடைப்புகள் அல்லது பருக்கள், தேட செல்களால் அடைக்கப்பட்டு, சில நேரங்களில் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தோன்றும், "என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் மருத்துவ சிகிச்சைக்கு, எமோலியண்ட்ஸ் மற்றும் கெரடோலிடிக்ஸ், ரெட்டினாய்டுகள், வைட்டமின் டி3 டெரிவேடிவ்கள் மற்றும் லேசர் சிகிச்சைகள் போன்ற மேற்பூச்சு சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
மருத்துவம் உள்ளதா?
இந்த சிகிச்சைகள் ஒரு மேம்போக்கான பயன்களை வழங்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறினாலும், கெரடோசிஸ் பிலாரிஸை குணப்படுத்துவதற்கோ, கட்டுப்படுத்துவதற்கோ மருத்துவம் எதுவும் இல்லை. இதுகுறித்து பேசும் மருத்துவ நிபுணர்கள், “கெரடோசிஸ் பிலாரிஸ் குளிர்காலங்களில் சருமம் வறண்டு போவதால் வருகிறது. எல்லா சருமத்திற்கும் தினசரி ஈரப்பதம் தேவைப்படுகிறது, எனவே குறைந்தது 12 மணிநேர நீரேற்றத்தை உறுதியளிக்கும் பாடி கிரீம்கள் அல்லது லோஷன்கள் பயன்படுத்த வேண்டும். தோல் அடிக்கடி உரிந்து வந்துவிட்டால் இந்த பிரச்சனை வரவே வராது", என்கின்றனர்.
குளிர்காலத்தில் கெரடோசிஸ் பிலாரிஸ் அல்லது சிக்கன் ஸ்கின்னை குணப்படுத்துவதற்கான டிப்ஸ்:
- இறந்த சரும செல்களை அகற்ற உதவும் லேசான தோல் பொருட்களை பயன்படுத்தவும்.
- மென்மையாக தோல் உரிவதற்கு பியூமிஸ் ஸ்டோன் அல்லது லூஃபாவைப் பயன்படுத்தவும்.
- வறண்ட சருமத்தை ஹைட்ரேட் செய்ய லாக்டிக் அமிலம் போன்ற ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் கொண்ட ஸ்கின் லோஷன்களைப் பயன்படுத்தவும்.
- கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் பயன்படுத்துதல், தோல் அழற்சியைத் தணித்து, புடைப்புகளை மென்மையாக்கும்.
- வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு நாளைக்கு இரண்டு முறை பாடி லோஷனைப் பயன்படுத்த வேண்டும்.
- ஈரப்பதத்தை அதிகரிக்க எண்ணெய் நிறைந்த பாடி கிரீம்கள் பயன்படுத்தவும்.
- சூடான நீரில் குளிப்பது நல்லது, அது தோல் துளைகளை தளர்த்த உதவும்.
- இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை சருமத்திற்கு எரிச்சலூட்டும்.
- அறைகளில் ஈரப்பதமூட்டிகளைப் பயன்படுத்துங்கள், அவை காற்றில் ஈரப்பதத்தை சேர்க்கின்றன, அது சருமத்திலும் ஈரப்பதத்தை பராமரித்து, அரிப்பு புடைப்புகளைத் தடுக்கும்.
- 20 முதல் 22 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை பராமரிக்கவும், எலக்ட்ரிக் ஹீட்டர்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஆவியாக்குவதால், அறைகளை அதிக வெப்பமாக்க வேண்டாம்.