காதலித்து கரம் பிடித்த மனைவியை மூச்சை பிடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்கு பின் கணவரின் கொலை செய்த நாடகம் அம்பலமானது. 


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவர் வேடசந்தூர் பகுதியில் நூற்பாலை மில் தொழிலாளியாக பணியாற்றிய போது, அதே நூற்பாலையில் பணியாற்றிய  அரவக்குறிச்சியை சேர்ந்த ரம்ஜான் பேகம் இருவரும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துள்ளனர்.  காதலித்து வந்த ரம்ஜான் பேகத்தை திருமணம் முடிப்பதற்காக வடிவேலும் மதம் மாறி 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடித்துள்ளார்.


திருமணத்திற்கு பின்பு அவர் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் குடியேறி வேலை பார்த்து குடும்பத்தை நடத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வடிவேல் என்ற அபூபக்கர் சித்தீக்  வி. ஆர். பி  தெருவில் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடைய கணவன் வடிவேல் என்ற அபூபக்கர் சித்திக் மேலும் சில பெண்களிடம் தொடர்பில் இருந்து வந்ததால் கணவன் மனைவிக்கும்  இடையே கடந்த தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.




இந்நிலையில் நேற்று காலை ரம்ஜான் பேகம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அவரது உறவினர்களுக்கு தெரிவித்து வீட்டில் துக்க நிகழ்வு காண பந்தல் போடப்பட்டது. இந்நிலையில் அவரது உறவினர்கள் ரம்ஜான் பேகத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் ரம்ஜான் பேகத்தின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர்.


இதனிடையே காவல்துறையினர் விசாரணை செய்ததில் தன் மனைவி மாரடைப்பால் உயிரிழந்தார் என்பதுதான் உண்மை நீங்கள் என் மீது வீண்பழி சுமத்துகிறீர்கள் முடிந்தால் நான் கொலை செய்தேன் என்பதை நிரூபித்து விடுங்கள் என காவல்துறையினருக்கு சவால் விட்டுள்ளார்.


இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த போது ரம்ஜான் பேகத்தின் மூச்சை பிடித்து நிறுத்தியும்,  கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளது தெரிய வந்தது. 




இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மேலும் சில பெண்களிடம் தொடர்பில் இருந்ததால் மனைவி கண்டித்ததாகவும், அதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை நடந்த நிலையில் மனைவியை மூச்சை நிறுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.


இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறையினர் சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து வடிவேலு என்ற அபூபக்கர் சித்திக் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


இந்நிலையில் மனைவி இருக்கும் போதே மற்ற பெண்களிடம் உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருந்த மனைவியை கழுத்தை நெரித்து மூச்சை பிடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண