மேலும் அறிய

"சாதாரண வாந்திக்காக மருத்துவமனைக்கு சென்றவர் சடலமான சோகம்" - தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்..

சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்த நிலையில் தவறான சிகிச்சையால் உயிரிழப்பு எனக் குற்றம்சாட்டி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில், செரிமானக் கோளாறு காரணமாக நள்ளிரவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 35 வயது இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்களின் அலட்சியத்தாலும் தவறான சிகிச்சையாலுமே அப்பெண் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டி, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

நள்ளிரவு சிகிச்சை மற்றும் திடீர் உயிரிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரப் பகுதிக்கு உட்பட்ட மேல மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மனைவி சிவசங்கரி (35). இந்தத் தம்பதியினருக்கு ஆறு வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் மற்றொரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு சிவசங்கரிக்குத் திடீரென செரிமானப் பிரச்சனை ஏற்பட்டு, தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். மனைவியின் உடல்நிலை சோர்வடைந்ததைக் கண்ட கணவர் சுரேஷ், உடனடியாக அவரைச் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த மருத்துவர் சிவசங்கரியைப் பரிசோதனை செய்து, அவருக்கு ஊசி செலுத்தியதுடன் முதலுதவி சிகிச்சைகளை அளித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவமனைப் படுக்கையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த சிவசங்கரிக்கு, அடுத்த சில மணி நேரத்திலேயே உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியுள்ளது. 

இதைக் கண்டு பதற்றமடைந்த கணவர் சுரேஷ், பணியிலிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களை அழைத்துள்ளார். உடனடியாக விரைந்து வந்த மருத்துவர் சிவசங்கரியை மீண்டும் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் குற்றச்சாட்டும் சாலை மறியல் போராட்டமும்

சாதாரண வாந்தி மற்றும் செரிமானப் பிரச்சனைக்காக மருத்துவமனைக்கு நடந்து வந்த சிவசங்கரி, சில மணி நேரங்களிலேயே சடலமான செய்தியைக் கேட்டு கணவர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். சிவசங்கரிக்கு உரிய நேரத்தில் முறையான மருத்துவக் கண்காணிப்பும் சரியான சிகிச்சையும் அளிக்கப்படவில்லை என்றும், தவறான ஊசி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாகவும் உறவினர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த சிவசங்கரியின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் தாமு இனியவன் தலைமையில் சீர்காழி கச்சேரி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

சாலையின் குறுக்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராகவும், தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

முக்கிய கோரிக்கைகளும் காவல்துறை பேச்சுவார்த்தையும்

போராட்டத்தின்போது, தாயை இழந்து தவிக்கும் இரண்டு சிறு குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உயிரிழந்த சிவசங்கரியின் குடும்பத்திற்குத் தமிழக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மற்றும் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று சீர்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரை உடனடியாகப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் ஆகிய மூன்று முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

சாலை மறியல் குறித்த தகவல் அறிந்ததும் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

ஆனால், உயரதிகாரிகள் நேரில் வந்து உரிய உத்தரவாதம் அளிக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி போராட்டக்காரர்கள் பிடிவாதம் பிடித்ததால், முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் மறியல் நீடித்தது.

வட்டாட்சியர் உறுதியும் போக்குவரத்து பாதிப்பும்

இதனையடுத்து, சீர்காழி வட்டாட்சியர் (தாசில்தார்) ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து, டிஎஸ்பி சரவணன் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து போராட்டக்காரர்களிடம் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ள நிவாரணம் மற்றும் அரசு வேலை உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மூலமாகத் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாட்சியர் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் தங்களது சாலை மறியல் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

காலை வேளையில் பரபரப்பான நேரத்தில், பிரதான நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் பெரிதும் பாதிப்படைந்தனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் தற்கொலை!
உசிலம்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் தற்கொலை!
தனிஷ்க் கொள்ளை: பட்டதாரி இளைஞர் வீட்டில் 15 மணி நேர சோதனை... தந்தை விசாரணை வளையத்தில் !
தனிஷ்க் கொள்ளை: பட்டதாரி இளைஞர் வீட்டில் 15 மணி நேர சோதனை... தந்தை விசாரணை வளையத்தில் !
"காதல் திருமணத்தால் ஆத்திரம்" மாப்பிள்ளை வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணின் தந்தை
ரூ.22 கோடி சுருட்டல்! வங்கி கணக்குகளை குறிவைக்கும் சைபர் கொள்ளையர்கள் – உஷார் மக்களே!
ரூ.22 கோடி சுருட்டல்! வங்கி கணக்குகளை குறிவைக்கும் சைபர் கொள்ளையர்கள் – உஷார் மக்களே!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Akwan: யூட்டன் அடித்து சென்னை பக்கம் திரும்பும் அக்வான் புயல்.. பேய் மழை கன்ஃபாம்.. அலறிவிடும் டெல்டா வெதர்மேன்!
Cyclone Akwan: யூட்டன் அடித்து சென்னை பக்கம் திரும்பும் அக்வான் புயல்.. பேய் மழை கன்ஃபாம்.. அலறிவிடும் டெல்டா வெதர்மேன்!
Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!
Gold Rate Today: சரசரவென சரிந்த தங்கம் விலை.. சவரன் ரூ.5,120 குறைந்தது.. 4 நாட்களில் தலைகீழாக மாறியது!
Toll Gate: வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி டிராபிக் ஜாம் தொல்லையே இருக்காது! பரனூரைத் தொடர்ந்து நெமிலியிலும்!
Toll Gate: வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! இனி டிராபிக் ஜாம் தொல்லையே இருக்காது! பரனூரைத் தொடர்ந்து நெமிலியிலும்!
30 நிமிடப் பயணம் இனி 5 நிமிடம்! ரூ.621 கோடி மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் சொன்ன முக்கிய தேதி!
30 நிமிடப் பயணம் இனி 5 நிமிடம்! ரூ.621 கோடி மேம்பாலம் எப்போது திறக்கப்படும்? முக்கிய தேதி!
Tamil Nadu Weather: உஷார் மக்களே! உருவாகிறான் பேரரக்கன்! சூறாவளிக்காற்று! எங்கெல்லாம் மழை? மீனவர்களுக்கு வார்னிங்!
Tamil Nadu Weather: உஷார் மக்களே! உருவாகிறான் பேரரக்கன்! சூறாவளிக்காற்று! எங்கெல்லாம் மழை? மீனவர்களுக்கு வார்னிங்!
நிர்வாண போட்டோவிற்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த அதிகாரி! பாகிஸ்தான் உளவாளிக்கு இவ்வளவு மெசேஜா?
நிர்வாண போட்டோவிற்கு ஆசைப்பட்டு ராணுவ ரகசியங்களை பகிர்ந்த அதிகாரி! பாகிஸ்தான் உளவாளிக்கு இவ்வளவு மெசேஜா?
ரூ.22 கோடி சுருட்டல்! வங்கி கணக்குகளை குறிவைக்கும் சைபர் கொள்ளையர்கள் – உஷார் மக்களே!
ரூ.22 கோடி சுருட்டல்! வங்கி கணக்குகளை குறிவைக்கும் சைபர் கொள்ளையர்கள் – உஷார் மக்களே!
Rasi Palan: இன்று யாருக்கு ஜாக்பாட்? யாருக்கு அலைச்சல்? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Rasi Palan: இன்று யாருக்கு ஜாக்பாட்? யாருக்கு அலைச்சல்? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Embed widget