மேலும் அறிய

தினம் ஒரு குண்டாஸ்... மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 47 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு..

மயிலாடுதுறையில் பொதுமக்களை அச்சுறுத்திய சரித்திர பதிவேடு குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவர் காவல் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோடங்குடி பகுதியைச் சேர்ந்த தங்கையன் என்பவரின் மகனான 41 வயதுடைய செந்தில்குமார் என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி பொது இடத்தில் கையில் கூர்மையான கத்தியை வைத்துக்கொண்டு அவ்வழியாகச் சென்ற பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். அந்த சமயத்தில் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெரம்பூர் காவல் உதவி ஆய்வாளர், இச்சம்பவத்தைக் நேரில் கண்டு உடனடியாக குற்றவாளி செந்தில்குமாரை மடக்கிப் பிடித்தார். சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எதிரி செந்தில்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

போக்கிரி சரித்திர பதிவேடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள்

கைது செய்யப்பட்ட செந்தில்குமார் ஏற்கனவே தொடர்ச்சியான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பெரம்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது 'போக்கிரி சரித்திர பதிவேடு' (History Sheeter) துவங்கப்பட்டு, அவரது செயல்பாடுகள் தொடர்ந்து காவல் துறையினரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. எனினும், சிறையிலிருந்து வெளியே வரும்போதெல்லாம் அவர் மீண்டும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். சமுதாயத்தில் பிற குடிமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் இவரது செயல்பாடுகள் தீவிரமடைந்ததால், இவரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடுமையான சட்ட நடவடிக்கை தேவைப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையும் ஆட்சியரின் உத்தரவும்

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த செந்தில்குமார் மீது வழக்கமான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பது போதுமானதாக இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அவரைத் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் B. சினேஹா ப்ரியா., எதிரி செந்தில்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் (Goondas Act) நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு விரிவான பரிந்துரை அறிக்கையைச் சமர்ப்பித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அறிக்கையையும் எதிரியின் பின்னணியையும் தீர பரிசீலித்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், செந்தில்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

கடலூர் மத்திய சிறையில் அடைப்பு மற்றும் காவல்துறை எச்சரிக்கை

மாவட்ட ஆட்சியரின் உத்தரவினைத் தொடர்ந்து, பெரம்பூர் காவல் நிலைய காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் கொண்டு சென்று பாதுகாப்பாக அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டில் மட்டும் மாவட்டத்தில் தீவிர குற்றப் பிரிவுகளில் ஈடுபட்ட 47 நபர்கள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கொலைக் குற்றங்களில் ஈடுபட்ட 5 நபர்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 15 நபர்கள், மதுவிலக்கு வழக்குகளில் தொடர்புடைய 9 நபர்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 15 நபர்கள், குட்கா விற்பனையில் ஈடுபட்ட ஒரு நபர் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 2 நபர்கள் உள்ளடங்குவர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் B. சினேஹா ப்ரியா இது குறித்துக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ரௌடிசத்தில் ஈடுபடுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது எவ்விதத் தயக்கமும் இன்றி குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கடும் எச்சரிக்கையாக கூறியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய எஸ்பியாக பொறுப்பேற்ற சினேஹா ப்ரியா தொடர்ந்து குண்டாஸ் சட்டத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம் !! இளம்பெண் விஷம் குடித்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை
இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம் !! இளம்பெண் விஷம் குடித்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
சொகுசு வாழ்க்கை ஆசை ; டாக்டர் வீட்டில் 10 சவரன் நகை திருடிய வேலைக்காரப் பெண் - சிக்கியது எப்படி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget