சீர்காழி அடுத்த நிம்மேலி கிராமத்தில் இரவு நேரத்தில் கடைகள், தெருமின் விளக்கு மற்றும் வீடுகளை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த சிறுவன் உள்ளிட்ட 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


மதுபோதையில் அடாவடி


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே  உள்ளது நிம்மேலி கிராமம். இங்குள்ள கடை மற்றும் கடைகளின் வாசல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விற்பனை ஸ்டால்கள் ஆகியவற்றை இரவு நேரங்களில் மது போதையில் அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியும், வீடுகள் மீது செங்கற்களையும் தூக்கி எறிந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்துள்ளனர்.


Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் திருவிழா! இந்தியாவிற்காக பங்கேற்கும் தடகள வீரர், வீராங்கனைகள் யார்? யார்? முழு விவரம்




திடீர் சாலைமறியல் போராட்டம்


இந்த தொடர் பிரச்சினை காரணமாக அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் புகார் மீது எவ்விதமான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள்,  நிம்மேலி கடைவீதியில் திடீர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த சீர்காழி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவதாக உறுதியளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலைமறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Parthiban: கதையெல்லாம் பார்ப்பதில்லை; தமன்னா டான்ஸ் இருந்தால் படம் ஹிட்... சர்ச்சையாகும் பார்த்திபனின் கருத்து




காவல்துறையினர் விசாரணை


இதனை தொடர்ந்து  சீர்காழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சூழலில் அந்த அடையாளம் தெரியாத நபர்கள் மதுபோதையில் செங்கற்களை சாலையில் வீசியும், பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நிம்மேலி பகுதியை சேர்ந்த 43 வயதான சக்திவேல் என்பவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக சக்திவேல் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 


மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா கோலாகலம்




சிறுவன் உட்பட மூன்றுபேர் கைது


அவர் அளித்த புகாரின் பேரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய தப்பி சென்றவர்களை குறித்து விசாரணை மேற்கொண்டதில் நிம்மேலி பகுதியை சேர்ந்த 19 வயதான விக்கி (எ) விக்னேஷ்,  கமல்ராஜ் மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரிய வந்தது.  அதனைத் அடுத்து அந்த மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரை சிறையிலும், சிறுவனை காப்பக்கத்திலும் விட்டனர்.


தமிழ்நாட்டில் 2026 ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 100 MLA இருக்க வேண்டும் - ரூபி மனோகரன்